ETV Bharat / sitara

சினிமாவில் உடனே அங்கீகாரம் கிடைக்காது - இசை அமைப்பாளர் டி.இமான்!

திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என துவண்டுவிடாமல் கடுமையாக உழைத்தால், நிச்சயம் ஒருநாள் அங்கீகாரம் கிடைக்கும் என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

சினிமாவில்
imman
author img

By

Published : Mar 30, 2022, 7:32 AM IST

சென்னை தனியார் கல்லூரி சார்பில், தேசிய விருது பெற்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், கடந்த ஆண்டு தனது ஒத்த செருப்பு படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் பார்த்திபன், விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பார்த்திபன், நாளைய சினிமாவை ஆளப்போவதும், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களை இயக்கப்போவதும் மாணவர்கள்தான் என்றும், பேஷன் (Passion) என்பது உயிரை விட மேலானது என்றும் தெரிவித்தார். "ஒத்த செருப்பு" திரைப்படம் இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளிவரவுள்ளது என்றும் தெரிவித்தார். தனது அடுத்த படமான "இரவின் நிழல்" ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நான் லீனியர் (Non linear)முறையில் எடுக்கப்பட்ட முதல் படம் இது என்றும் குறிப்பிட்டார்.

மே 1-ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் "இரவின் நிழல்" வெளியாகும் என்றும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார். விழாவில் பங்கேற்று பேசிய இசையமைப்பாளர் டி.இமான், தான் 13 வயதில் இசை பயணத்தை தொடங்கியதாகவும், திரைத்துறையில் இருபதாவது வருடம் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். திரைத்துறையில் சிலருக்கு உடனே வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்காது, சிலருக்கு உடனே கிடைக்கும், அதனால் துவண்டுவிடாமல் கடுமையாக உழைத்தால், உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் என்றும் இமான் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : மத்திய பாஜக அரசால் ஏழைகள் பலன் அடைகிறார்கள் - பிரதமர் மோடி பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.