ஆப்கான் வளர்ச்சிக்கு இந்தியாவின் கொடை அளப்பறியது - ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தை
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்தியாவின் பங்களிப்பு அளப்பறியது என ஆப்கான் அரசு வெகுவாக பாராட்டியுள்ளது.
போர் காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இந்தியாவின் பங்களிப்பு அளப்பறியது என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்தியாவின் மீது ஆப்கானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தாலிபான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானில் தேவையற்ற தலையீட்டை இந்தியா மேற்கொள்வதாக தாலிபான் தெரிவித்துள்ள கருத்துக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆப்கான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐம்பதாண்டு கால வரலாற்றில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்புகளை ஆப்கான் சந்தித்துள்ளது. பங்கரவாத அமைப்பு, அயல்நாடுகள் படையெடுப்பின் காரணமாக போர்க்களமாக இருந்த ஆப்கானின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது.
ஆப்கானின் சாலை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவின் கொடையானது அளப்பறியது. வருங்காலத்தில் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அடித்தளத்தை ஆப்கான் பெற்றதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்தும் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "சீனா பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்கப்போகிறது" உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!