ETV Bharat / state

குடியரசு தின தேநீர் விருந்து: இசை, நடனம் என களைகட்டிய ஆளுநர் மாளிகை! - TEA PARTY IN RAJ BHAVAN

நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு. கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர்
கலை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 9:22 PM IST

சென்னை: நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீ ராம், முன்னாள் ஆளுநர்கள் எம்.கே. நாராயணன்,
தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பத்ம விருது மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர்கள், ஐ.ஏ,எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச் ராஜா, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஆளுநர் ரவி அவர்களின் இருக்கைகளுக்கு நடந்து வந்து வணக்கங்களைத் தெரிவித்து வரவேற்றனர்.

பின் தேசிய கீதத்துடன் ஆளுநர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா குடியரசு பெற்றதன் வரலாறு நாடகமாக காட்சிப்படுத்தப்பட்டது. முதலில் நீதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மனுநீதிச் சோழனின் வாழ்க்கை வரலாறு நாடகமாக காட்டப்பட்டது. பின்னர் ராமானுஜர் வாழ்க்கை வரலாறு நாடகமாக காட்டப்பட்டது.

தொடர்ந்து இசை, நாட்டிய, கலை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகள் அரங்கேறின. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

பின்னர் சுற்றுசூழல், சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்ட தனி நபர்களுக்கு காசோலையுடன் கூடிய கவர்னர் விருது வழங்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் காலையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அரசு மரியாதையுடன் இறக்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீருடன் கூடிய இரவு சிற்றுண்ட பரிமாறப்பட்டது.

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு, திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இடதுசாரிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.