புதுடெல்லி: இந்தியாவுடன் பொருளாதார உறவை மேலும் முன்னெடுத்துச் செல்லவும், முறையற்ற குடியுரிமை விஷயங்களுக்கு தீர்வு காணவும் டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ருபியோ ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினர். அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மார்க்கோ ருபியோ, முதன் முதலாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிய வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
Delighted to meet @secrubio for his first bilateral meeting after assumption of office as Secretary of State.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 21, 2025
Reviewed our extensive bilateral partnership, of which @secrubio has been a strong advocate.
Also exchanged views on a wide range of regional and global issues.
Look… pic.twitter.com/NVpBUEAyHK
ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்: இந்த சந்திப்பு குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், "இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவது என்று பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பிராந்திய விஷயங்கள், அமெரிக்க-இந்திய உறவை மேலும் ஆழமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள், சிக்கலான மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, எரிசக்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்த்தியத்தில் தடையற்ற நிலையை முன்னெடுப்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்,"என்றார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் கவத்ராவும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மார்க்கோ ருபியோ அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கான முதல் சந்திப்பு நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இருநாடுகளுக்கு இடையேயான வரிவான ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தோம். பிராந்திய, சர்வதேச மட்டத்திலான பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். நமது முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்காக அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்,"என்று தெரிவித்துள்ளார்.
Great to meet NSA @michaelgwaltz again this afternoon.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 21, 2025
Discussed strengthening our friendship to ensure mutual benefit and enhance global stability and prosperity.
Looking forward to working together on an active and outcome oriented agenda.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/LUlc1WBbWm
குவாத் அமைச்சர்கள் கூட்டம்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இன்று மாலை மைக் வால்ட்ஸ் உடனான சந்திப்பு சிறப்பானதாக இருந்தது. சர்வதேச வலு மற்றும் வளர்ச்சியை விரிவாக்கம் செய்ய பரஸ்பரம் நலனுக்கான இருதரப்பு நட்புணர்வை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். பரஸ்பரம் இணைந்து பணியாற்றுவதற்கும், சாதகமான கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கும் காத்திருக்கின்றேன், "என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.14 கோடி பறிமுதல் விவகாரம்; திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை விசாரணை!
அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இருதரப்பு உறவுகளுக்கான சந்திப்புக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடங்கிய குவாத் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதியை நிர்வகிக்கும் நோக்கத்துடன் இந்த நான்கு நாடுகளும் குவாத் என்ற அமைப்பில் ஒன்றிணைந்துள்ளன.
Attended a productive Quad Foreign Ministers’ Meeting today in Washington DC. Thank @secrubio for hosting us and FMs @SenatorWong & Takeshi Iwaya for their participation.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 21, 2025
Significant that the Quad FMM took place within hours of the inauguration of the Trump Administration. This… pic.twitter.com/uGa4rjg1Bw
சர்வதேச நலன்: இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "குவாத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பங்கேற்றேன். இந்த கூட்டத்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி. டிரம்ப் நிர்வாகம் பதவி ஏற்ற சில மணி நேரங்களில் குவாத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவானாது, குவாத் உறுப்பினர் நாடுகளுடன் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவது தெரியவருகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தடையற்ற, வலுவான வளர்ச்சிக்கு தீர்வு காண்பது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். பெரிய விஷயங்களை சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆழமான கொள்கைகளை முன்னெடுத்தல், பரஸ்பரம் ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல் என வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியையும் இந்த சந்திப்பு கொடுத்துள்ளது. குவாத் நாடுகள் சர்வதேச நலனுக்காக தொடர்ந்து வலுவாக இயங்கும்," என்று கூறியுள்ளார்.