ஆட்டத்தின் 43 வது ஓவரில் இந்தியா வெற்றி பெற இன்னும் இரண்டு ரன்களே தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து இந்தியாவை அபார வெற்றி பெற செய்ததுடன், தானும் சதம் அடித்து அசத்தினார் விராட் கோலி. இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடிக்கும் 51வது சதமாகும். கோலி மற்றும் சுப்மன் கில், சிரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, எளிதாக வெற்றி பெற்றது.
Live Update: வீறுகொண்டு எழுந்த விராட் கோலி சதம்.. பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா! - IND VS PAK

Published : Feb 23, 2025, 3:11 PM IST
|Updated : Feb 23, 2025, 10:37 PM IST
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபிக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கி உள்ளது.
LIVE FEED
விராட் கோலி திரில் சதம்.. பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா!
அதிரடியில் இறங்கிய சிரேயாஸ் ஐயர்!
ஆட்டத்தின் 30வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், 31வது ஓவரில் ஒரு சிக்சர் என தன் பங்கிற்கு அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் சிரேயாஸ் ஐயர். 32.2 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி அரை சதம்!
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், நசீம் ஷா வீசிய 27வது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார் ரன் மெஷின் என்ற பெயரை பெற்ற விராட் கோலி. இந்த பவுண்டரியுடன் இன்றைய ஆட்டத்தில் அவர் அரை சதத்தை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். இதில் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். 27 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.
சுப்மன் கில் அவுட்!
அரை சதத்துக்கு இன்னும் நான்கு ரன்களே தேவைப்பட்ட நிலையில் அப்ரர் அகமது வீசிய ஆட்டத்தின் 18 ஓவரின் மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் சுப்மன் கில். அவர் 52 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இவற்றில் 7 பவுண்டரிகளும் அடங்கும். 19 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 107 ரன்கள் எடுத்துள்ளது.
14, 000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியின் 13வது ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்தார். இந்த பவுண்டரி அடித்தபோது அவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 14 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார். 15 ஓவர்களின் முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 89 ரன்களை எடுத்துள்ளது.
ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள்!
ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில் ஏழாவது ஓவரை வீசினார் அஃப்ரிடி. ஆனால் அந்த ஓவரின் 2,4 மற்றும் 5வது பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் சுப்மல் கில்.
ரோஹித் அவுட்!
ஷாகீன் அஃப்ரிடி வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. 5.3 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
சுப்மன் கில்லும் அசத்தல்!
ஷாகீன் அஃப்ரிடி வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் சுப்மன் கில். 4.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 26 ரன்கள் எடுத்துள்ளது.
ஃபோர், சிக்சர்..ஹிட்மேன் ரோஹித் கலக்கல்!
நசீம் ஷா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஃபோர், நான்காவது பந்தில் சிக்சர் அடித்து கலக்கினார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.
இந்தியா முதல் ஓவரில் 2 ரன்கள்!
242 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் ஆடி வருகின்றனர். முதல் ஓவரில் இந்தியா 2 ரன்கள் எடுத்துள்ளது.
241 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான். இந்தியாவுக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு!
சிக்சர்களை பறக்கவிட்ட பாக். வீரர்கள்!
முகமது சமி வீசிய ஆட்டத்தின் 49வது ஓவரில் பாக். வீரர்கள் குஷ்தி ஷா மற்றும் ஹரிஸ் ரவுஃப் தலா ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.ஆனால் அதே ஓவரில் சமி வீசிய பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் ரவுஃப்
ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!
ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் பாகிஸ்தான் - 46.1 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள்
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்!
குல்தீப் யாதவ் வீசிய ஆட்டத்தின் 43வது ஓவரின் 4வது பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் அஹா.
அடுத்த பந்திலேயே எல்பிடபள்யூ முறையில் டக் அவுட் ஆகி வெளியேறினார் ஷாகீன் அஃப்ரடி.
ஓவரின் கடைசி பந்தில் அடுத்த விக்கெட்டை எடுக்க முயன்ற குல்தீப் யாதவின் முயற்சி பலிக்கவில்லை. அதனால் அவர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை இழந்தார்.
ஐந்துக்கு குறைவான ரன் ரேட்!
41 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் 4.6
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான்!
ஆட்டத்தின் 34வது ஓவரில் கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழக்க, 35வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் அக்ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சயீத் ஷகீல். அவர் 5 பவுண்டரிகளுடன் 76 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
கேப்டன் விக்கெட்டை எடுத்த படேல்!
அக்ஷர் படேல் வீசிய ஆட்டத்தின் 34 ஓவரின் இரண்டாவது பந்தில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான். அவர் 73 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.
சயீத் ஷகீல் அரை சதம்!
பாகிஸ்தான் அணியின் மிடிர் ஆர்டர் பேட்ஸ்மேனான சயீத் ஷகீல் ஆட்டத்தின் 31வது ஓவரின் முடிவில் அரை சதம் அடித்தார். 63 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் அவர் 50 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
கொஞ்சம் சூடுபிடித்த ஆட்டம்!
குல்தீப் யாதவ் வீசிய ஆட்டத்தின் 26 வது ஓவரில் சயீத் ஷகீல் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கேப்டன் முகமது ரிஸ்வானும் தமது பங்கிற்கு ரவீந்திர ஜடேஜா வீசிய 27வது ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 27.3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
மயிரிழையில் தப்பிய சயீத்!
குல்தீப் யாதவ் வீசிய ஆட்டத்தின் 24 வது ஓவரின் கடைசி பந்தில் சயீத் ஷகீல் ஒரு ரன் எடுக்க முயல, எதிர்முனையில் பந்து நேரடியாக ஸ்டெம்பை பதம் பார்த்தது. ஆனால் மூன்றாவது நடுவரிடம் செய்யப்பட்ட முறையீட்டில் அது ரன் அவுட் இல்லையென தெரிந்தது.
11 ஓவர்கள் -30 ரன்கள்!
பாகிஸ்தான் அணி முதல் 11 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 11 ஓவர்களில் அந்த அணி வெறும் 30 ரன்களே எடுத்தது. அதாவது 22 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை என்பதே அந்த அணியின் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல்.
5 ஓவர்களுக்கு பவுண்டரி அடிக்காத பாகிஸ்தான்!
குல்தீப் யாதவ் வீசிய 10 ஓவரின் நான்காவது பந்தில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் நான்கு ரன்கள் (பவுண்டரி) அடித்த நிலையில், அடுத்த ஐந்து ஓவர்களில் அந்த அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்ஷர் படேல் வீசிய 16 ஓவரின் முதல் பந்தில் சயீத் ஷகீல் ஒரு பவுண்டரி அடித்தார்.
குறைந்த ரன் ரேட்!
11 ஓவர்கள் வரை ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் என்ற விதத்தில் ஆடிக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கடைசி மூன்று ஓவர்களில் அந்த அணியின் ரன் ரேட் விகிதம் 4.35 ஆக குறைந்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்!
ஆட்டத்தின் 10 ஆவது ஓவரில் இமாம் உல் ஹக், ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரை அக்ஷர் படேல் அசத்தலாக ரன் அவுட் செய்தார். 11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 55/2 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் விக்கெட்டை எடுத்த ஹர்திக் பாண்டியா!
ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பாபர் ஆசாம். அவர் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 41/1