துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியின் இன்றைய போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
242 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்தார். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, கடைசி வரை ஆட்டமிக்காமல், அசத்தலான சதமடைத்து அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார். 42.3 ஓவர்களிலேயே 244 ரன்களை அடித்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திரில் சதம்: அதாவது ஆட்டத்தின் 43வுது ஒவரில் இந்தியா வெற்றி பெற இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி 96 ரன்கள் எடுத்திருந்தார். குஷ்தில் ஷா லீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அடித்து திரிலான சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். இது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அடித்துள்ள 51வது சதமாகும்.
For his unbeaten 💯 and guiding #TeamIndia over the line, Virat Kohli is the Player of the Match 👏 🏆
— BCCI (@BCCI) February 23, 2025
Scoreboard ▶️ https://t.co/llR6bWyvZN#PAKvIND | #ChampionsTrophy | @imVkohli pic.twitter.com/vuBuKtWW06
இதையடுத்து, இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.
இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இன்று படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியின் 13 வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய அணியின் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மா, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களை கடந்த துவக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை இன்று நிகழ்த்தினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் பட்டியலிலும் இணைந்தார்.
இத்தொடரின் தமது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வெற்றி கொண்ட இந்தியா, இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.