தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

சென்னை ஐகோர்ட் அருகில் புதிய கடைகள்; மெட்ரோ நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெட்ரோ மற்றும் உயர் நீதிமன்றம் கோப்புப்படங்கள்
சென்னை மெட்ரோ மற்றும் உயர் நீதிமன்றம் கோப்புப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 1:55 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஐந்தாவது நுழைவாயில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி பல கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறி, வழக்கறிஞர் அருணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ரயில் நிலையத்தின் பெயருக்கு முன்னால் பெரிய எழுத்துக்களுடன் தனியார் நிறுவனத்தின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்தப் பெயரை முறையாக அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பின்னர், இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details