வேலூர் : வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் சத்யாவின் மகன் அவினாஷ் (30) இவர் கடந்த 14ம் தேதி வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு மூளைச் சாவால் உயிரிழ்ந்தார்.
இதனை அடுத்து அவினாஷ் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் உறவினர்கள் முன் வந்ததை அடுத்து இருதயம் சென்னை எம்.ஜி.எம் அல்லது அப்போலோ மருத்துவமனைக்கும், நுரையீரல்கள் எம்.ஜி.எம் அல்லது கிளென் ஈகல் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டை மற்றும் வேலூர் சி.எம்.சிக்கும், வலது சிறுநீரகம் கிளென் ஈகல் மருத்துவமனை அல்லது ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.