ETV Bharat / bharat

தோழிகளாக சென்ற ட்ரிப்! நீச்சல் குளத்தில் மூழ்கி இளம்பெண்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம் - MYSURU GIRLS SWIMMING POOL DEATH

கர்நாடக மாநிலத்தில் மைசூரைச் சேர்ந்த மூன்று தோழிகள் சுற்றலாவிற்காக ரிசார்ட்டிற்கு சென்ற நிலையில், ங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி மூவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 6:18 PM IST

மங்களூரு/கர்நாடகா: கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 3 பெண்கள் நிஷிதா எம்.டி (21), பார்வதி எஸ் (20) மற்றும் கீர்த்தனா என் (21) மங்களூருவுக்கு அருகில் உள்ள உல்லாலா காவல் நிலையத்திற்குட்பட்ட சோமேஷ்வர் கிராமம், பட்டப்பாடி சாலையில் உள்ள பெரிபைல் என்ற இடத்தில் உள்ள வாஸ்கோ ரிசார்ட்டிற்கு சுற்றலாவிற்காக வந்தாக தெரிகிறது.

இந்நிலையில் மூவரும் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது நீச்சல் குளத்தில் குளிப்பதை செல்ஃபோனில் படம்பிடிப்பதற்காக நீச்சல் குளத்திற்கு அருகே அதனை வைத்துவிட்டு, முதலில் ஒருவர் மட்டும் நீச்சல் குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதத்தில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்: பாஜக அமைச்சர்கள் வீடு, கார்களை சூரையாடிய போராட்டகாரர்கள்!

அதைப் பார்த்த இரண்டு தோழிகளும் நீரில் மூழ்கியவரை மீட்க சென்றபோது. பரிதாபமாக அவர்களும் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த காட்சி அவர்கள் பொறுத்தி இருந்த செல்ஃபோன் கேமராவில் மற்றும் ரிசார்ட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உல்லாலா காவல்துறையினர், அந்த மூன்று பெண்களின் உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உல்லாலா காவல் ஆய்வாளர் எச்.என்.பாலகிருஷ்ணா தலைமையிலான காவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இதுவரை வழக்குப் பதியப்படாத நிலையில், மூவர் உயிரிழப்புக்கான காரணமும் தெரியவரவில்லை.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.