ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம், தேர்வு அறை(கோப்புப்படம்)
டிஎன்பிஎஸ்சி அலுவலகம், தேர்வு அறை(கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 3:43 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி(TNPSC) மூலம் பல்வேறு துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4, குரூப்-8 உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில், அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வுப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இன்று(அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.

வரிசை எண்தேர்வு வகைஅறிவிக்கை நாள்தேர்வு நடைபெறும் நாள்
1குரூப்-1(Group 1)01.04.202515.06.2025
2குரூப்-4(Group 4)25.04.202513.07.2025
3ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்(நேர்முகத் தேர்வு பணிகள்)07.05.202521.07.2025
4ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்)21.05.202504.08.2025
5ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் 13.06.202527.08.2025
6குரூப் - 2 மற்றும் குரூப்-2 ஏ15.07.202528.09.2025
7ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்-5 ஏ)07.10.202521.12.2025

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம் எனவும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையின் போது வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும், தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள் வரை மாற்றங்களுக்கு உட்பட்டது. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு நடந்து முடிந்த குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று அடுத்த ஆண்டுக்கான உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் மேலும் 2,208 இடங்கள் சேர்ப்பு.. துறைவாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.