சென்னை: 46வது - தடயவியல் துறையின் கருத்தரங்கம் சென்னை கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 02) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மாடல் என்று சொல்லுங்கள்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, “பட்ஜெட்டில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று தமிழக கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால், நீங்கள் திராவிட மாடல் என்று சொல்கிறீர்கள், தமிழ்நாடு மாடல் என்று சொல்ல வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். திருக்குறள் பற்றி பேசியுள்ளார்.
பீகார் பட்ஜெட் என்று கனிமொழி கூறியுள்ளார். தமிழக்த்திற்கு கிடைக்கவேண்டிய நிதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக குறிக்கோளாக உள்ளது. 12 லட்சம் சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது தமிழர்களுக்கும் பொருந்தும் தானே.
அந்த மாசு பட்டவர் யார்?
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த 'மாசு'பட்டவர் யார்? என்று இதுவரை தெரியவில்லை. யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்காமல், பத்திரிக்கையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது. பத்திரிக்கையாளர்கள் செல்போன் கூட சுதந்திரமாக வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பத்திரிக்கை சுதந்திரம் என்ன ஆனது? குற்றவாளிகள் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை!
ஈசிஆர் விவகாரத்தில் துணை ஆணையர் தவறு செய்பவர்கள் திமுக கொடியை பயன்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார். திமுக கொடி இருந்தால் அவர்கள் திமுக தான் என்ற நம்பகத்தன்மை இல்லை என்பதை ஆர்.எஸ்.பாரதி ஒத்துக்கொண்டிருக்கிறார். திமுக கொடி கட்டிய காரில் குற்றவாளிகள் பயணிக்கிறார்களா? திமுக கொடி பறக்கும் வீடுகளில் குற்றவாளிகள் இருக்கிறார்களா? என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது.
விஜய் பனையூரை விட்டு வெளியே வர வேண்டும்:
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கூறியுள்ளார். தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தவெக தலைவர் விஜய் பனையூரை விட்டு வெளியே வந்து மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அரசியலில் 'Invisible' ஆக உள்ள அவர் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா?
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தவெக இணைந்ததும் திருமாவளவனை வந்து சந்தித்தித்துள்ளார். முதலில் நீ போ பின்னாடி நான் வருகிறேன் என்று கூட அதன் பொருளாக இருக்கலாம். அவ்வளவு பாசமாக ஆதவ் அர்ஜூனாவை கட்டியணைத்துள்ளார். வேறு கட்சிக்குப் போன ஒருவரை அவ்வளவு மகிழ்ச்சியாக வரவேற்பார்களா? திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி திருமாவளவன் இருப்பாரா அல்லது முதலில் ஆதவை அனுப்பி வைத்துவிட்டு ஆதவன் கூட்டணியிலே இருப்பாரா? என்பது தெரியவில்லை.