ETV Bharat / snippets

செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - senthil balaji 'x' page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.

விசாரணைக்கு தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஆஜராகினார். அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளனர். குறுக்கு விசாரணை நிறைவடையாததை அடுத்து விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.