ETV Bharat / entertainment

விக்னேஷ் சிவன் ’LIC’ படத் தலைப்பை பயன்படுத்தியது நியாயமா?... நயன்தாராவுக்கு பிரபல இசையமைப்பாளர் பதிலடி! - SS KUMARAN ABOUT LIC TITLE ISSUE

SS Kumaran questions Nayanthara: நான் பதிவு செய்திருந்த LIC படத் தலைப்பை விக்னேஷ் சிவன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது நியாயமா என இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் நயன்தாராவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நயன்தாரா,  எஸ்.எஸ்.குமரன் புகைப்படம்
நயன்தாரா, எஸ்.எஸ்.குமரன் புகைப்படம் (Credits - ANI, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 16, 2024, 4:34 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரௌடி தான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். அப்படத்தின்‌ போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நயன்தாரா குறித்த ஆவணப் படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது வருகின்ற 18ஆம்‌ தேதி நயன்தாரா பிறந்தநாளன்று வெளியாகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.‌ அதில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள் ஆவணப்படத்தில் 3 விநாடி பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.எஸ்.குமரன் அறிக்கை
எஸ்.எஸ்.குமரன் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் தனுஷ் பற்றி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நயன்தாராவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா தரப்பு மீது இசையமைப்பாளரும் இயக்குநருமான எஸ் எஸ் குமரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். இப்போது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.

எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும், பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும், உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா அறிக்கையால் பற்றி எரியும் கோலிவுட்... தனுஷ் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் களவாணி, தேநீர் விடுதி, விருந்தாளி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தேநீர் விடுதி படத்தை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் ’LIC’ தலைப்பை அறிவித்த போது LIC நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை வழக்கால் தலைப்பு ’LIK’ என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.