ETV Bharat / state

2026-இல் யாருடன் கூட்டணி? - அன்புமணி ராமதாஸ் சொன்ன நச் பதில்! - ANBUMANI RAMADOSS STATEMENT

2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் (anbumani ramadoss facebook page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 4:41 PM IST

சென்னை : சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பேட்மிண்டன் விளையாட்டுக்கான கட்டுமானம் தமிழகத்தில் இல்லை. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோர் ஸ்டேடியம் சிறப்பானதாக இல்லை. சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அரசு மருத்துவர்களுக்கு பணிப்பளு அதிகமாக உள்ளது. புதிய மருத்துவர்களை பணிக்கு எடுக்க அரசு தயங்குகிறது.

தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்களை நியமிக்க அரசு எழுதப்படாத கொள்கையை பின்பற்று வருகிறது. மருத்துவத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும், மின்சாரத் துறையிலும் தற்காலிக பணியாளர்களை தான் அரசு நியமனம் செய்கிறது.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது. 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். சென்னையின் நிலைமையை எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும்.

முறையாக வடிகால் கட்டுமானங்கள் அமைக்கப்படாததால் மழை பெய்யும் காலங்களில் போட் தயார் செய்யும் நிலையில் நாம் உள்ளோம். டோக்கியோவில் மழை பெய்யும் காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து அதனை மீண்டும் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறி உள்ளார்கள்.

இதையும் படிங்க : 2,553 மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. இனிமேல் தான் அதிக அளவு பெய்ய உள்ளது. 6 கோடிக்கு மேல் மரங்களை நட்டோம் என அரசு சொல்லுகிறார்கள். சென்னையில் பெரிய பூங்காக்களே கிடையாது. கோயம்பேடு பகுதி மக்களுக்கான இடம் அப்பகுதியில் பூங்கா அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக கொடுக்க வேண்டும். உலகின் பெரிய, பெரிய நகரங்களில் பல வகையான பெரிய பூங்காக்கள் உள்ளது.

நமது வரிப்பணத்தில் திமுக அரசு காலநிலை ஆலோசர்களை நியமனம் செய்துள்ளது. ரூ.50 லட்சத்திற்கு மேல் இதற்காக செலவு செய்கிறார்கள். திமுக 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.

அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி, தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள்.

உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்ற செய்தி தவறானது என்றார். 2026ல் கூட்டணி குறித்த கேள்விக்கு, 2026ல் கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் பாமக இருக்கும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.