சென்னை: தெற்கு ஆசிய மாணவர்களுக்கும் அமெரிக்காவின் மசாசுசெற்ஸ் (MASSACHUSETTS) பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் வகையில் அந்த பல்கலைக்கழகம் சென்னை ஐஐடி உடன் இணைந்து நேற்று (ஜன.21) ‘தெற்கு ஆசியக் கல்வி நிறுவனங்கள் உருமாற்றம் இணைப்புகள்’ என்ற தலைப்பில் கண்காட்சி அமைத்துள்ளது.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழர்கள் தங்களது பாரம்பரிய விஷயங்களைச் சேமித்து வைக்காமல் போய்விட்டனர். கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் செய்யும்பொழுது தான் தமிழர்களின் தொன்மை உலகிற்குத் தெரிகிறது.
இதையும் படிங்க: கல்விக்கு முழு செலவை செய்யும் மாநிலத்துக்கே வேந்தர் பதவி - மு.க.ஸ்டாலின் அதிரடி கோரிக்கை!
இது போன்ற ஆராய்ச்சிகள் நமக்குத் தேவை. கீழடியில் அந்த பொருட்களைக் கால கணக்கீடுகள் செய்யும் பொழுது அதன் காலங்களில், தமிழர்களின் தொன்மை மற்றும் நமது பாரம்பரியங்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேன்மேலும் நமது தொன்மைகளை வெளியே கொண்டு வருவதற்குப் பயன்படக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.