ETV Bharat / state

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு: வரும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு! - LAWYER KAMARAJ MURDER CASE

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் உறுதியளித்துள்ளார்.

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் வழக்கறிஞர் காமராஜ் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 4:48 PM IST

மதுரை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இவரும் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் மதுரையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனாலும், தற்போதுவரை வழக்கு முடிவுறாத நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: எலி மருந்து மரணம்: நிறுவனத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2014ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும், 2021ஆம் ஆண்டு இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையடுத்து, இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உத்தரவு வந்து மூன்று வருடங்கள் கழித்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. எனவே விரைந்து விசாரணையை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், "இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்," என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், உடனடியாக மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில், "இந்த வழக்கு விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. வருகின்ற செவ்வாய்க்கிழமை, அதாவது நவம்பர் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது," என உறுதியளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.