ஐதராபாத்: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியுன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்த திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் போட்டிகளை நடத்தும் படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அட்டவணை தயார் செய்து இருந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் சர்வதேச கிரிக்கெட் கன்வுசிலில் (ஐசிசி) எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்துள்ளது.
முன்னதாக ஸ்கார்து, ஹன்சா மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்திய பகுதிகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருந்தது. இதற்கு பிசிசிஐ தரப்பில் ஐசிசியிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனிடையே மதிப்புமிக்க சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 8 நாடுகளுக்கு பயணிக்க உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் முக்கிய பகுதிகளில் பொது மக்களின் பார்வைக்காக இந்த கோப்பை காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்று (நவ.16) இஸ்லாமாபாத்தில் இருந்து புறப்படும் இந்த கோப்பை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தானை சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் 26ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வரும் சாம்பியன்ஸ் கோப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. கோப்பை பயணிக்கு விவரங்கள் இதோ,
- 16 நவம்பர் - இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
- 17 நவம்பர் - தக்ஸிலா மற்றும் கான்பூர், பாகிஸ்தான்
- 18 நவம்பர் - அபோதாபாத், பாகிஸ்தான்
- 19 நவம்பர்- முர்ரே, பாகிஸ்தான்
- 20 நவம்பர் - நாதியா கலி, பாகிஸ்தான்
- 22 - 25 நவம்பர் - கராச்சி, பாகிஸ்தான்
- 26 - 28 நவம்பர் - ஆப்கானிஸ்தான்
- 10 - 13 டிசம்பர் - பங்களாதேஷ்
- 15 - 22 டிசம்பர் - தென்னாப்பிரிக்கா
- 25 டிசம்பர் - 5 ஜனவரி - ஆஸ்திரேலியா
- 6 - 11 ஜனவரி - நியூசிலாந்து
- 12 - 14 ஜனவரி - இங்கிலாந்து
- 15 - 26 ஜனவரி - இந்தியா
- ஜனவரி 27 - மீண்டும் பாகிஸ்தான் செல்கிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நிச்சயம் பங்கேற்கபோவதில்லை என இந்தியா தெரிவித்துள்ள நிலையில், ஹைபிரிட் முறையில் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது நாடாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அங்கு இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெறலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படிங்க: Border-Gavaskar Trophy: இந்திய அணியில் இருந்து சுப்மான் கில் விலகல்? என்ன காரணம்?