ETV Bharat / opinion

மத்திய பட்ஜெட் 2025 : நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் முதலீடுகள், வேலைவாய்ப்பு - ஓர் பகுப்பாய்வு! - UNION BUDGET 2025 ANALYSIS

வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பு என மத்திய பொது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்த பகுப்பாய்வை இக்கட்டுரையில் காணலாம்.

கொல்கத்தாவில் ஒரு ஷோரூமில் பட்ஜெட் நிகழ்வை ஆர்வமுடன் காணும் பொதுமக்கள்
கொல்கத்தாவில் ஒரு ஷோரூமில் பட்ஜெட் நிகழ்வை ஆர்வமுடன் காணும் பொதுமக்கள் (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 10:55 PM IST

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை வெளிப்படுத்திய அம்சங்களே மத்திய பட்ஜெட் 2025 இடம்பெற்றுள்ளந. நடுத்தர வர்க்கம் முதல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை, விவசாயம், எரிசக்தி முதல் வணிகம் செய்வதை எளிதாக்குதல் வரை என கடந்த இரண்டு நாட்களில் விவாதிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையை ஆழமான பகுப்பாய்வு செய்ய நேரம் எடுக்கும் என்றாலும் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருமான பெருக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஏராளமான வாக்குறுதிகளை மத்திய பொது பட்ஜெட் முன்வைக்கிறது.

செலவின வரியை நோக்கி செல்கிறதா அரசு?

இப்படி வளர்ச்சியை குறிக்கும் பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், சில கவலைப்படும் விஷயங்களும் இதில் உள்ளன. நிதி இடைவெளியைக் குறைத்து உள்கட்டமைப்பை அரசாங்கம் எவ்வாறு அதிகரிக்கும்? என்பதே அவற்றில் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள், நிதிப் பற்றாக்குறை இலக்கான 4.9 சதவீதத்திற்கு எதிராக 4.8 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், கடந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு செலவு நிர்ணயிக்கப்பட்டதை விட 10 சதவீதம் குறைவாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.4 சதவீதமாகக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். பொது பட்ஜெட்டின் அளவை ஒன்பது சதவீதம் அதிகரிப்பதற்கும்,நேரடி வரிகளில் ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்ததற்கும் மேலானதாகும்.

அதிகரித்துவரும் செல்ஃபோன் அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிப்பு வருமானம் மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்த அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு உதவியாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், மொத்த வருமான வரி வருவாய் இன்னும் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே, மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தின் சுமையை அரசாங்கம் குறைப்பது அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தவறில்லை. இதன் பயனமாக ஊதியதாரர்கள் தங்களின் சம்பாத்தியத்தை இப்போது முதலீடு செய்யவும். செலவழிக்கவும் இயலும்.

வருமான வரி சீரமைப்பின் பயன்கள்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதும், வரி விதிப்பு மறுசீரமைக்கப்படுவதாவும்; வருமான வரி என்பது இனிமேல் பணக்காரர்களுக்கும் அதிக ஊதியம் பெறுபவர்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

இந்த மாற்றத்தால் இரண்டு பயன்கள் உள்ளன. முதலாவதாக, இது சிறு கடை உரிமையாளர்கள், மீன் விற்பனையாளர்கள் போன்ற சிறு வணிகங்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் அதன் பயனமாக முறையான பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, பணப் பொருளாதாரம் குறையும். மேலும் அரசாங்கத்திடம் குடிமக்களின் வருமானம் குறித்த சிறந்த தரவு கிடைக்கும். அதன் மூலம் சிறந்த திட்டமிடல் மூலம் பொருளாதார நன்மைகள் கிடைக்கப் பெறும்.

அடுத்து சமீபகாலமாக, பின்தங்கியிருந்த நகர்ப்புற நுகர்வுக்கான உந்துதல் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் உடனடி நன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. SIP எனப்படும் திட்டமிடப்பட்ட முதலீடுகள் மூலம் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பரஸ்பர நிதிகளில் ஒரு முக்கிய முதலீட்டாளராக திகழ்கின்றனர். வருமான வரி விதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் SIP போன்ற முதலீடுகளை அதிகப்படுத்தி பங்குச்சந்தை மற்றும் உள்ளூர் நிதியைப் பயன்படுத்த உள்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பை மேம்படுத்த வேண்டும்.

அடிப்படையில், ஜிஎஸ்டி வாயிலாக அதிக நிதி திரட்டுவது, மூலதன ஆதாய வரி போன்றவற்றின் மூலம் நேரடி வரி வருவாய் இழப்புகளை குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கான நிதியை அதிகரிக்க அது போதுமானதா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. விவசாயம் மற்றும் பெட்ரோலியம் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராமல் இருப்பதும், இவற்றின் மீதான சிக்கலான வரி விதிப்பு முறையும் ஜிஎஸ்டி வரி வருவாய்க்கு எதிராக அமைந்துள்ளது.

வெறுமனே, செலவின வரி என்பதை நோக்கி நகர்வதற்கு முன் வரி விதிப்புகளில் உள்ள முரண்பாடுகள் களைப்பட வேண்டும். அரசியல் மற்றும் கூட்டாட்சியில் உள்ள சிக்கல்கள் ஜிஎஸ்டியை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதில் தடை கற்களாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை.

அரசு - தனியார் பங்களிப்பு திட்டத்துக்குத் திரும்புகிறதா அரசு?

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், அரசு - தனியார் கூட்டு முயற்சி (Public Private Patnership) தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. "ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டங்களும் அரசு -தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநில அரசுகளும் இந்த வழிமுறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும்." என்று நிதியமைச்சர் நிர்மலா சீகாராமன் தமது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியாவில் அரசு -தனியார் கூட்டு திட்டங்கள் மிகவும் மோசமான வெற்றி விகிதத்தையே கொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசாங்கம், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தனியார் முதலீடுகளில் கவனம் செலுத்தியது குறிப்பாக நெடுஞ்சாலைத் துறையில் இத்திட்டத்தின் சிக்கல்கள் தெளிவாகத் தெரிந்தன.

நிறுவனங்கள் முதலீடு செய்ய விரைந்தன. வழக்கமான நிபந்தனைகளுடன் வங்கிகளும் கடன்களை வழங்கின. சுங்க வரி வசூல் மூலம் இக்கடனை திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலை கட்டுமானத்தில் உள்ள சட்ட, நிர்வாக மற்றும் தொழில்நுட்பரீதியிலான சிக்கல்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக, நெடுஞ்சாலைத் துறையிலும் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள், முழுமையடையாத திட்டங்கள் என பட்டியல் நீண்டது என்ற கடந்தகால கசப்பான அனுபவமாக உள்ளது.

மிகப்பெரிய வாக்குறுதி!

இந்திய அஞ்சல் துறை ஒரு மிகப்பெரிய தளவாட சேவை வழங்கும் அமைப்பாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். உலகளவில் பெயர் பெற்றுள்ள DEL நிறுவனம் ஒரு காலத்தில் ஜெர்மனி நாட்டின் அஞ்சல் துறையாக திகழ்ந்தது என்பதே உண்மை. ஆனால் எந்தவொரு மாற்றமும் கார்ப்பரேட்மயமாக்கலில் இருந்துதான் தொடங்க வேண்டும். இந்திய அஞ்சல் துறை ஆங்கிலேய ஆட்சி கால சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே முதலீடுஸ பணி கலாச்சாரத்தில் மாற்றம் போன்ற மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே இந்திய அஞ்சல் துறையில் அபரிமிதமான மாற்றங்களை கொண்டு வர முடியும். இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும்.

- கட்டுரையாளர்: பிரதீம் ரஞ்சன் போஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.