ஹைதராபாத்:இந்திய மோட்டார் சந்தையில் மிகவும் பிரபலமாகவும், அனைவரையும் கவரும் வகைகளிலும் உள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). தற்போது அதன் அப்டேட் வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள், வேரியண்ட் மற்றும் அதன் விலை ஆகியவை குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
வேரியண்ட் மற்றும் நிறங்கள்: ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கை ஹெரிடேஜ், ஹெரிடேஜ் ப்ரீமியம், சிக்னல்ஸ், டார்க் மற்றும் க்ரோம் என ஐந்து வேரியண்ட்களில் வெளியிட்டிருக்கிறது.
- ஹெரிடேஜ் வேரியண்டானது மெட்ராஸ் ரெட் (Madras Red) மற்றும் ஜோத்பூர் ப்ளூ (Jodhpur Blue) ஆகிய இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஹெரிடேஜ் ப்ரீமியம் வேரியண்டானது மெடலியன் ப்ரான்ஸ் (Medallion Bronze) நிறத்தில் கொடுக்கப்படுகிறது.
- சிக்னல்ஸ் வேரியண்டானது கமாண்டோ சேண்டு (Commando Sand) நிறத்தில் கிடைக்கிறது.
- டார்க் வேரியன்டானது கன் கிரே (Gun Grey) மற்றும் ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) ஆகிய இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- க்ரோம் வேரியண்டானது எமரால்டு (Emerald) நிறத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், இவைகளை தவிர்த்து ரெட்டிச் கிரே (Redditch Grey), ரெட்டிச் ரெட் (Redditch Red), ஹல்சியன் பிளாக் (Halcyon Black) மற்றும் ஹல்சியன் கிரீன் (Halcyon Green) ஆகிய நான்கு நிறங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள்:
- LED முகப்பு விளக்கு
- கியர் பொசிஷன் இன்டிகேட்டர்
- சிங்கிள் சேனல்/ டூயல் சேனல் ABS
- அட்ஜஸ்ட்டபில் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்
- LED இன்டிகேட்டர்கள்
- ட்ரிப்பர் நேவிகேஷன்
- C டைப் சார்ஜிங் USB போர்ட்
- முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்ஸ்
- பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சாபர்
- 300mm முன்பக்க டிஸ்க் பிரேக்
- 270mm பின்பக்க டிஸ்க் பிரேக்