ETV Bharat / state

கே. பாலகிருஷ்ணன் கருத்து தான் அனைத்து கட்சிகளின் கருத்து.. திமுகவை வீழ்த்த ஒன்றிணைவோம் - டிடிவி அழைக்கிறார்! - CPM BALAKRISHNAN

சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் கோப்புப்படம் , டிடிவி தினகரன்
கே.பாலகிருஷ்ணன் கோப்புப்படம் , டிடிவி தினகரன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 1:42 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார்

சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. அதனால் தான் அனைத்து எதிர்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள்.

இந்த போராட்டங்கள் எல்லாம் நாடகம் என்று திமுக கூறுகிறார்கள். அதற்கு காரணம் திமுகவினர் கதை எழுதி நாடகம் நடத்தி வளர்ந்த கட்சி. திமுக செய்வது தான் கபட நாடகம். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் அரசாங்கமே இவ்வளவு தூரம் ஏன் அச்சமடைகிறது? ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று முன் வைக்கப்படுகிறது. திமுகவில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பலர் கூறுகிறார்கள்.

200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர். போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானவர்கள் கூலிப்படையினராக மாறி 5 ஆயிரம் 10 ஆயிரத்துக்கும் கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதை கடுமையாக தடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை திசை திருப்பும் விதமாக திமுக செயல்படுகிறது. தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என்பது ஒரு பக்கம், விலைவாசி உயர்வு என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக கட்டாயம் 200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது. இந்த ஆட்சி அடுத்த முறை தொடராது'' என்றார்.

அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் துரைமுருகன் டெல்லி சென்றிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி, ''திமுகவினர் மேடையில் வீர வசனம் பேசுவர். அதே நேரத்தில் மறைமுகமாக பின் வாசல் வழியாக சென்று மத்திய அரசின் கதவை தட்டுவார்கள். திமுகவின் பித்தலாட்டங்கள் கட்டாயம் பலிக்காது.

தேசிய ஜனநாயக கூட்டணி

அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தை நல்ல காவல் துறை அதிகாரிகளை வைத்து விசாரணை செய்யலாம். ஆனால், திமுக விரும்புவது போல் விசாரணை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்தது போன்று தமிழ்நாட்டில் இனி ஒரு சம்பவம் கூட நடக்கக்கூடாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் ஒன்றிணைைய வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுகவை, வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் சரியான தீர்வாக இருக்கும். திமுக-வை வீழ்த்த அனைவரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியாக இருக்க கூடிய பா.ஜ.க-வை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள். பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறுவது தவறானது. 2019ல் பா.ஜ.க வாங்கிய வாக்கு , 2021 இல் வாங்கிய வாக்குகளை விட 2024 ல் அதிகமாகி இருக்கிறது.

பா.ஜ.க வளர்ந்து வருகிறது

தமிழகத்தில் பா.ஜ.க வும் வளர்ந்து வருகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியும் வலுப்பெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இரட்டை இலையை வைத்து கொண்டு அதிமுக-வை கபிளிகரம் செய்துள்ளார். அவரிடம் இரட்டை இலை இருப்பதால் பலர் ஏமார்ந்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக அதிமுக-வை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார். பழனிசாமி இன்று வரை தப்பிக்க காரணம் திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதால் தான். அவர் தனியாக போட்டியிட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார். 2026க்கு பிறகு கட்சி எப்படி இருந்தால் என்ன எப்படி போனால் என்ன என்ற மனநிலையோடு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். என டிடிவி தினகரன் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.