ETV Bharat / state

திருப்பத்தூர் இளைஞர் தற்கொலை: இறப்பிற்கு முன் வீடியோ பதிவு; கந்துவட்டியால் நேர்ந்த சோகம்! - TIRUPATTUR USURY SUICIDE

ஆம்பூர் அருகே கந்துவட்டிக் கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர் செல்வகுமார்
தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர் செல்வகுமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 9:23 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வரும் நிலையில், இளைஞர் தனது இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். திருமணம் ஆகாத இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று பல தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொழில்களில் இழப்பு ஏற்படவே, குடியாத்தம், விண்ணமங்கலம் மற்றும் கோவையை சேர்ந்த பெண் உள்பட மூன்று பேரிடம் ரூ.20 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அவரை அடித்து துன்புறுத்தி அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், கடன் தொகையை முழுவதும் கொடுத்த பின்பும், கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அதிக மன உளைச்சலில் செல்வகுமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், இளைஞர் தனது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தனது இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக, தனது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் வீடியோ மற்றும் கடிதம் எழுது வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கந்து வட்டி கடனால் இளைஞர் தற்கொலை.. அதிக வட்டிக்கு பணம் கொடுத்த இருவர் கைது!

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், செல்வகுமார் கடைசியாக பேசிய வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், செல்வகுமாரின் இறப்பிற்கு முக்கிய காரணமான விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது மகன்கள் தினேஷ் மற்றும் செல்வா ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதுவரையில் செல்வகுமாரின் உடலை வாங்கமாட்டோம் என செல்வகுமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர், செல்வகுமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, தினேஷ் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தையடுத்து, செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கந்துவட்டி பிரச்னை பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அரசின் கடும் நடவடிக்கைகளால், அது குறைந்து வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், வீடியோ பதிவு எடுத்து வைத்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.