சென்னை: மன அழுத்தம் பிரச்சனைகள் இருப்பவர்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட மலர்களை பார்க்கும் போது மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இப்படிப்பட்ட ஒரு அருமையான மலர்கண்காட்சிக்கு மெயின்டனன்ஸ் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, அதற்கு நுழைவு கட்டணம் 200 ரூபாய் அளிப்பது சரியானதுதான் என சென்னை மலர் கண்காட்சி குறித்து புகழ்கிறார் மன நல மருத்துவர் வசந்தகுமாரி.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசத்தலங்களில் உள்ள பூங்காக்களில் கோடை விழா நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இதைப்போன்று, சென்னை மக்களை கவரும் வகையில் 2022-ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
தோட்டக்கலை பயிர்களின் வளத்தையும், வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் நோக்கில் கடந்த மூன்று மலர் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இக்கண்காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், சென்னையின் நான்காவது மலர் கண்காட்சியை, ஜனவரி 2ம் தேதி செம்மொழி பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மலர்களே மலர்களே இது என்ன கனவா? என வியக்கும் அளவிற்கு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
"நான் எல்கேஜியில் படிக்கிறேன், நான் முதல் முறையாக கண்காட்சி பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது குரங்கு, மயில், பட்டாம்பூச்சி இவை அனைத்தும் பார்த்தேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் இதை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு என்னை அழைத்து வந்தார்கள். எனது பள்ளி மதியமே முடிந்துவிட்டது. எனவே கண்காட்சி பார்ப்பதற்கு வந்துவிட்டேன். இங்கு தண்ணீரில் நான் விளையாடினேன்" என தனது அனுபவத்தை மகிழ்ச்சியோடு கூறுகிறார் சிறுவன் தமிழ் செழியன்.
நித்தியகல்யாணி முதல் ஆர்கிட்ஸ் வரை: இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா, பென்ஸ்டிமான், டேலியா, கல்வாழை, சூரிய காந்தி, வெர்பினா, ஆன்டிரினம், ஜெரேனியம், பென்டாஸ், வயலா, ஜெர்பரா, ஆர்கிட்ஸ்.
நித்தியகல்யாணி, ப்ரிமுலா, வெட்சி, கேலா லில்லி, ஆஸ்டர், டெய்சி, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, இரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டிக்கே சென்று வந்த அனுபவம்: "மலர்களை பார்க்கும் அனுபவம் ஊட்டிக்கு சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது" எனக்கூறும் வில்லிவாக்கத்தை சேர்ந்த இளங்கோவன், "அனைவரும் நிச்சயமாக மலர் கண்காட்சியை பார்க்க வேண்டும் குறிப்பாக குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும்" என்றார்.
நம் கண்களுக்கு இயற்கை சார்ந்து பார்ப்பது மிகவும் நல்லது என்று பல மருத்துவர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது போன்ற மலர் கண்காட்சியை கண்டு ரசித்தால் கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் அலங்கரிக்கப்பட்ட மலர்கள் முன் நின்று புகைப்படம் செல்ஃபி எடுத்து கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மலர் கண்காட்சியை காண வருகை தந்திருக்கின்றனர்.
நுழைவுக் கட்டணம் அதிகம்?: "நுழைவு கட்டணம் கடந்த முறை 150 ரூபாய் இருந்தது இம்முறை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்" எனவும் கூறியுருந்தார் இளங்கோவன். கட்டணம் அதிகம் என்று நினைப்பது இருந்தாலும் இந்த மலர்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கு அதிக பொருட்செலவு தேவைப்படும் எனவே 200 ரூபாய் என்பது சரியான கட்டணம் என்று என்னுடைய கருத்து.
நாம் இது போன்ற மலருக்கும் கட்சியை ஊட்டிக்கு வரைக்கும் சென்று பார்ப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று நமக்கு தெரியும். அதைவிட இந்த மலர்க்கும் காட்சிக்கு 200 ரூபாய் தாராளமாக கொடுக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த பானுமதி.
"நம்ம ஊரில் அடிக்கும் வெயிலுக்கு இப்படி மலர் கண்காட்சி வைத்திருப்பது சிறந்த வேலைபாடு தான். இப்படிப்பட்ட ஒரு அருமையான மலர்கண்காட்சிக்கு மெயின்டனன்ஸ் மிகவும் அதிகமாக இருக்கும் எனவே அதற்கு நுழைவு கட்டணம் 200 ரூபாய் அளிப்பது சரியானதுதான்" என்கிறார் மருத்துவர் வசந்தகுமாரி.
கட்டண விவரங்கள்: செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும். மேலும் இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாயாகவும், சிறியவர்களுக்கு 100 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேமராவிற்கு 500 ரூபாயாகவும், வீடியோ கேமராவிற்கு 5000 ரூபாயும் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இம்மலர்காட்சி ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் மற்றும் 30 லட்சம் மலர் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 30 லட்சம் மலர் தொட்டிகளை பார்க்க கண்கள் போதாது. நம் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு இந்த மலர்க்கண்காட்சியானது இருக்கிறது. அமைதியான சூழலில், பூக்கள் இடையே பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் பலரும் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் யானைகளின் கோபத்திற்கு காரணம் என்ன?