ETV Bharat / bharat

டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை! - DELHI ELECTION POLL COUNTING

டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி
அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி (ETV Bharat Tamil Nadu, @narendramodi)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2025, 11:07 PM IST

டெல்லி: டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 08) சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

டெல்லி சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

மும்முனை போட்டி என்றாலும், சுயேச்சை வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 699 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த மொத்தம் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வாக்களிப்பதற்காக மொத்தம் ஒரு கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதில், மொத்தம் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதையும் படிங்க:டெல்லியை கைப்பற்ற போவது யார்? - வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!

டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தது 36 தொகுதிகளில் வெற்றி பெறுதல் வேண்டும். இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக வெற்றி பெறும் என்றே தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 8) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில், பிற்பகலுக்குள் வெற்றி நிலவரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குபதிவை முன்னிட்டு கட்டுப்பாட்டு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் நான்காவது முறையும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது கருத்துக்கணிப்புகளின் படி 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.