தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

கூகுள் பே சர்க்கிள்: பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் புதிய அம்சம்! - GOOGLE PAY CIRCLE

கூகுள் தனது பணப் பரிமாற்றத் தளமான 'கூகுள் பே' செயலியில் புதிய சர்க்கிள் அம்சத்தை சேர்த்துள்ளது.

Gpay
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது கூகுள் பே சர்க்கிள் அம்சம். (Google)

By ETV Bharat Tech Team

Published : Oct 14, 2024, 7:47 PM IST

கூகுள் பே, இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலி ஆகும். மேலும், பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து, பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. தற்போது, புதிய "கூகுள் பே சர்க்கிள்" என்ற அம்சத்தினை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் வாயிலாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை 'கூகுள் பே' இன்னும் எளிமையாக்குகிறது. இதை அறிமுகம் செய்திருக்கும் கூகுள் நிறுவனம், விரைவில் இந்திய பயனர்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்காக, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கூகுள் பே சர்க்கிள் என்றால் என்ன?

கூகுள் பே சர்க்கிள் என்பது, உங்கள் கூகுள் பே கணக்கில் ஒரு குறிப்பிட்ட குழுவை உருவாக்கி, அவர்களுடன் எளிதாக பணப் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.

கூகுள் பே சர்க்கிளை எவ்வாறு பயன்படுத்துவது?

கூகுள் பே சர்க்கிள் கணக்குகளை இணைக்கும் முறை (Google)
  1. உங்கள் கூகுள் பே செயலியைத் திறக்கவும்.
  2. "புதிய வட்டம்" (New Circle) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. புதிய வட்டத்திற்கு ஒரு பெயரிடவும்.
  4. வட்டத்தில் சேர்க்க விரும்பும் நபர்களை தேர்ந்தெடுத்து இணைக்கவும்
  5. புதிய கூகுள் பே வட்டத்தை உருவாக்கவும்.
  6. வட்டம் உருவாக்கப்பட்டதும், நீங்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.

கூகுள் பே வட்டத்தின் நன்மைகள்:

கூகுள் பே சர்க்கிள் பணம் செலுத்தும் முறை (Google)

பயன்படுத்த எளிதானது: இந்த அம்சம் பயன்படுத்த மிகவும் எளிதானது.

பாதுகாப்பானது: கூகுள் பே வட்டத்தின் வாயிலாக உங்கள் பணப் பரிமாற்றங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இலவசம்: இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

இந்த அம்சத்தின் பயன்கள் என்ன?

  • நண்பர்களுடன் இணைந்து பணம் செலுத்துதல்: உணவகக் கட்டணம், பயணச் செலவுகள், பரிசுகள் போன்றவற்றை நண்பர்களுடன் எளிதாகப் பிரித்துக் கொள்ளலாம்.
  • சிறிய வணிகங்களுக்கு: சிறிய வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
  • குடும்பச் செலவுகளைப் பகிர்தல்: வீட்டுச் செலவுகள், வாடகை, மளிகைச் சாமான்கள் போன்றவற்றை குடும்ப உறுப்பினர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் பே வட்டம் (Google Pay Circle), பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் ஒரு சிறந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை எளிமையாக்கி, அதை நிர்வகிக்க அனுமதிக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details