சென்னை: இயக்குநர் பாலா 25 ஆண்டுகள் பாராட்டு விழாவில் நடிகர் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார். பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சேது’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. பாலா இயக்கத்தில் முதல் படமான சேது (1999), விக்ரம் திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 18ஆம் தேதி திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ஆடியோவும் அன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் இயக்குநர் பாலா குறித்து சூர்யா எமோஷனலாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "இயக்குநர் பாலா இயக்கிய முதல் படம் சேது அவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அப்படம் பார்த்து சில நாட்கள் நான் தூங்கவில்லை.
Look at how emotionally #Suriya addresses & Thanks Dir Bala🤌♥️
— AmuthaBharathi (@CinemaWithAB) December 20, 2024
" without bala anna i'm nothing here🛐, i got khakaha, ghanini and so on with the opportunity of nandha🤞. with #Vanangaan Dir Bala will become the most wanted director of Kollywood♥️" pic.twitter.com/zQ0iiHaFx2
அவ்வளவு பெரிய படத்தை இயக்கிய பாலா, இரண்டாவது படத்தை என்னை வைத்து இயக்கினார். அவர் எப்படி என்னை நம்பினார் என தற்போது வரை யோசித்து வருகிறேன். நந்தா படம் என் வாழ்க்கையை மாற்றியது. கும்பகோணம் கோயிலில் மொட்டை அடித்து கொண்டு பின்னணியில் சின்னத்தாயவள் பாடலோடு எடுக்கப்பட்டது. அவரிடம் சின்ன சின்ன அசைவுகள் கூட நடிப்பில் கற்றுக் கொண்டது என அனைத்தும் என் நினைவில் உள்ளது” என்றார்.
மேலும் சூர்யா பேசுகையில், "2000ஆம் ஆண்டில் அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எனக்கு இந்த பயணம் இல்லை. நந்தா படத்தை பார்த்து விட்டு தான் கௌதம் மேனன் காக்க காக்க வாய்ப்பு கொடுத்தார். பின் முருகதாஸ் கஜினி பட வாய்ப்பு கொடுத்தார். என் வாழ்வில் பிள்ளையார் சுழி போட்டது, எனக்கு மரியாதை வாங்கி கொடுத்தது, என் வாழ்க்கையை மாற்றியவர் என் அண்ணன் பாலா தான்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டு வேஷ்டி சட்டையில் கலக்கும் அஜித்; ’விடாமுயற்சி’ படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி! - VIDAAMUYARCHI UPDATE
முன்னதாக வணங்கான் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து சில காட்சிகள் எடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் சூர்யா விலகிய நிலையில், அருண் விஜய் நடித்தார். தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ’சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார்.