ETV Bharat / technology

IGDC 2024: சிறந்த கேம்களுக்கு விருது; AVGC மையங்களைத் திறக்க தமிழ்நாடு முடிவு! - IGDC 2024

இந்தியா கேம் டெவலெப்பர் மாநாடு (IGDC) 2024 புதிய டிஜிட்டல் விளையாட்டு வடிவமைப்பாளர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இது கேமிங் சந்தையில் இந்தியா முன்னேறி வருவதை எடுத்துரைத்திருக்கிறது.

IGDC 2024
IGDC 2024 ((GDA India and IndiaGDC))
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 18, 2024, 9:44 AM IST

ஹைதராபாத்: இந்தியா கேம் டெவலெப்பர் மாநாடு (IGDC), என்பது பிரபலமான கேம்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வாகவும், புதிய படைப்புகளை காட்சிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இதன் 16ஆவது மாநாடு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்வான இது, கேம் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (GDAI) குழுவால் நிர்வகிக்கப்பட்டு, ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் (HICC) வைத்து ஒருங்கிணைக்கப்பட்டது.

நவம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடந்த இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து பல கேமிங் டெவலப்பர்கள் வந்திருந்தனர். மேலும், முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் இருந்தும் ஆளுமைகள் அழைத்து வரப்பட்டிருந்தது.

The India Game Developer Conference
The India Game Developer Conference (ETV Bharat)

முக்கியமாக சொல்லவேண்டும் என்றால், ஜோர்டான் வெய்ஸ்மேன் (EAI), டிம் மோர்டென் (Frost Giant Studios), பிரைஸ் ஜான்சன் (மைக்ரோசாப்ட்), கீர்த்தி சிங் (Hitwicket), ராபி ஜான் (சூப்பர் கேமிங்), சீன் சோன் (Sean Sohn - Krafton Inc India) போன்ற ஆளுமைகளை உள்ளடக்கிய தொழில்துறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் IGDC நிகழ்வில் குறிப்பிடத்தக்க பேச்சாளர்களாக இருந்தனர்.

டிஜிட்டல் கேம்களுக்கான மாநிலங்களின் ஆதரவு: இந்திய விளையாட்டு மேம்பாட்டு மாநாட்டில் (IGDC 2024) தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில அரசுகள், விளையாட்டு வடிவமைப்புகளில் உள்ளூர் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சியை ஊக்குவிக்க, AVGC (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைக்கான பிரத்தியேக சிறப்பு மையங்களைத் தொடங்க திட்டமிட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில், கேம் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவுக்கும், ராஜஸ்தான், சிக்கிம் மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

இதையும் படிங்க: முதல் ஹைபிரிட் ராக்கெட்; வான் தொழில்நுட்பத்திற்கான வருங்கால வழிகாட்டி

மேலும், IP மேம்பாடு மற்றும் ஆரம்ப கட்டத்தில் வரும் கேமிங் நிறுவனங்களை ஆதரிக்க ஏதுவாக இன்குபேட்டர் திட்டங்களை அமைப்பதற்கான ஒரு கட்டமைப்பை வகுக்கும், "இன்குபேட்டர் வெள்ளைப் புத்தகம்", தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் MIB-இன் சிறப்பு செயலாளர் நீர்ஜா சேகர் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

சிறந்த கேம்களுக்கான விருதுகள் 2024: 2024-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு மேம்பாட்டு மாநாட்டில் (IGDC 2024) பல்வேறு பிரிவுகளில் கேம் டெவலப்பர்கள் மற்றும் கேம்களை உருவாக்கும் ஸ்டுடியோக்களை கௌரவிக்கும் விதமாக IGDC விருதுகள் வழங்கப்பட்டன.

கணினி அல்லது கேமிங் கன்சோல் விளையாட்டுகள் (Console Game of the Year): இதில் The Palace on the Hill என்ற கேம் பரிசைத் தட்டிச்சென்றது. இரண்டாம் இடத்தில் Fears to Fathom – Woodbury Getaway இருந்தது. முறையே Brocula, Project F, The Demon’s Exorcism ஆகியவை இந்த பிரிவில் விருதுக்காக பங்கேற்றவை ஆகும்.

சிறந்த மொபைல் கேம் 2024: இந்த பட்டத்தை “Once upon a merge” என்ற கேம் தட்டிச்சென்றது. இரண்டாம் இடத்தில் ‘Dream Cricket 2024' இருந்தது. முறையே Wizard World: Magic Merge, Hospital Rush, Shri Ram Mandir Game ஆகியவை இந்த பிரிவில் விருதுக்காக போட்டியிட்ட மொபைல் விளையாட்டுகள் ஆகும்.

சிறந்த மெய்நிகர் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள் (AR/VR Game of the Year): இதில் 'Sportsverse' என்ற கேம் முதல் பரிசைத் தட்டிச்சென்றது. இரண்டாம் இடத்தில் 'Hammer Heads' இருந்தது. முறையே Get the Duck, Spacey’s Adventure (Mobile AR), SubmergedVR ஆகியவை இந்த பிரிவில் விருதுக்காக பங்கேற்றவை மெய்நிகர் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள் ஆகும். மேலும் டிஜிட்டல் கேமிங் துறையில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை, ஸ்ருதி வர்மா, லக்ஷ்மி கானோல்கர் ஆகியோர் பெற்றனர். ராஜேஷ் ராவ் என்பவருக்கு 'ஹால் ஆஃப் பேம்' மரியாதை கொடுக்கப்பட்டது.

கேமிங் துறைக்கு இந்திய அரசின் ஆதரவு: GDAI அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் வீடியோ கேமிங் துறையை ஒருங்கிணைக்கவும் மேம்படுத்தவும் தொடங்கப்பட்டது ஒரு அமைப்பாகும். இதன் வாயிலாக கேமிங் துறைக்கு சீரான வளர்ச்சி இருந்தபோதிலும், கொள்கை ஆதரவு, திறன் மேம்பாடு, நிதியுதவி போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. இந்த சிக்கல்களைக் களைந்து, கேமிங் துறையில் இந்தியாவை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்து நிலைநிறுத்துவதே, GDAI தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

IGDC 2024 நிகழ்வின் முதல் நாளில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு கலந்துகொண்டார். அப்போது, வீடியோ கேமிங் மற்றும் இன்டெராக்டீவ் பொழுதுபோக்குத் துறையின் தலைவர்களுடனானக் கொள்கைக் கூட்டங்களில் பங்கேற்றார். வீடியோ கேமிங்கிற்கும், பணம் வைத்து விளையாடும் கேமிங்கிற்கும் இடையிலான வேறுபாட்டை, தங்கள் அரசாங்கம் எப்படி புரிந்து வைத்துள்ளது என்பதைக் குறித்துப் பேசினார். தொடர்ந்து, கேம் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவுடன் (GDAI) இணைந்து உயர்தர திறமைகளை வளர்ப்பதில் அமைச்சகம் ஆதரவுடன் செயல்படும் என்பதையும் உறுதிபடுத்தினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.