ETV Bharat / state

எல்லை தாண்டி நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - 30 லாரிகளில் கேரளாவுக்கு திருப்பி அனுப்பிவைப்பு! - MEDICAL WASTE SENT BACK KERALA

கேரளாவில் இருந்து எல்லை தாண்டி தமிழகத்தின் நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 30 லாரிகளில் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மற்றும் கேரள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை
மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மற்றும் கேரள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை (Credits -ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருநெல்வேலி: கேரளாவில் இருந்து எல்லை தாண்டி தமிழகத்தின் நெல்லை பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 30 லாரிகளில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி :மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள தகவலில், ""பழவூர், கொண்டாநகரம், பாரதி நகர், திடியூர் ஆகிய 4 இடங்களில் இருந்து 12 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று 18 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் இன்றே எல்லை தாண்டி கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகர பஞ்சாயத்து பகுதிகள், சீதப்பரப்பநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், மேலதிடியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட பல இடங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்) மூன்று நாட்களுக்குள் கழிவுகளை சேகரித்து கேரளாவுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், முக்கூடல், சீதப்பரப்பநல்லூர், முன்னீர்பள்ளம் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரள அதிகாரிகள் திருநெல்வேலிக்கு வந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். இக்கழிவுகளை முழுமையாக சேகரித்து கேரளாவிற்கு கொண்டு செல்ல கேரள அரசு முடிவு செய்து திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது.

கேரளா செல்லும் வழியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க லாரிகள் மீது தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் பணி இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருநெல்வேலியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அனைத்து லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு, அவை தரம் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என, குப்பை சேகரிப்பை ஆய்வு செய்த கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சாக்ஷி தெரிவித்தார்.

முன்னதாக, இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அளித்துள்ள தகவலில், “எத்தனை லாரிகளில் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்த வீடியோ ஆதாரத்துடன் கூடிய விரிவான அறிக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும். கேரளாவில் உள்ள கொல்லத்திற்கு இக்கழிவுகள் கொண்டு செல்லப்பட உள்ளன. மேலும் இவை சேகரிக்கப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படும். மேலும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், கேரள எல்லையான கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 18 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்." என்ற மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.