ETV Bharat / state

மெரினா கடற்கரையில் உணவு திருவிழா; திறந்து வைத்து உணவுகளை சுவைத்து மகிழ்ந்த உதயநிதி - CHENNAI MARINA FOOD FESTIVAL

சென்னை மெரினா கடற்கரையில் 5 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உணவை சுவைத்து மகிழும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உணவை சுவைத்து மகிழும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்கியான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழாவை நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தொடங்கியது.

இந்த விழாவைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த பிரத்யேக உணவுகளை சுவைத்து மகிழ்ந்தார். விழா ஏற்பாட்டாளர்கள், அந்தந்த மாவட்ட உணவுகளின் சிறப்புகள் குறித்து துணை முதலமைச்சருக்கு விளக்கினர்.

உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)

பல்வகை உணவுகள்

உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி – அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி போன்ற பல ரகங்கள் சுவைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.

உணவு குறித்து கேட்டறியும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உணவு குறித்து கேட்டறியும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)

மேலும், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டிணம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம்பூரி, சென்னை தயிர் பூரி ஆகியனவும் இடம்பெற்றன.

ஐந்து நாள் திருவிழா

மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க
  1. புத்தாண்டை வரவேற்க சூப்பரான பால் பாயாசம்..ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!
  2. சிக்கன் எடுத்தா இப்படி செஞ்சு பாருங்க..குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்!
  3. பிக்பாஸில் காரசார சண்டையை ஏற்படுத்திய கேரளா 'சம்மந்தி' இதான்..மறக்காம நீங்களும் செஞ்சி பாருங்க!

நேற்று மாலை 4 மணிக்கு முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெற்றது. அதேபோல இன்று முதல் 24 வரை பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

உணவு திருவிழாவிற்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கும் காட்சி
உணவு திருவிழாவிற்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

உணவுத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.