ETV Bharat / business

எட்டாக்கனியாக மாறி வரும் தங்கம்... தொடர் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி! - GOLD RATE IN CHENNAI

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.64,440-க்கு விற்பனையாகி வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 2:05 PM IST

சென்னை: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிராமுக்கு ரூ.10 அதிகரித்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.8055-க்கும், ஒரு சவரன் ரூ. 64,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் என்றாலே மக்கள் மத்தியில் சேமிப்பு என்ற ஒரு எண்ணம் உள்ளது. அதனால், எதிர்கால தேவைக்காக இன்றே தங்கத்தை வாங்கி சேமிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாகவே ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயருவது வழக்கம். அந்த வகையில், தங்க நகையின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2025 வருடத் தொடக்கத்தில் இருந்தே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த (2024) டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரூ.56,880க்கு விற்பனையான தங்கம் விலை, இன்று ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்டம் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கணியாக மாறி வருகிறது.

அதுமட்டுமின்றி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, 10 கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1.50 லட்சத்தை எட்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (பிப்ரவரி 24):

  • 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,055
  • 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.64,440
  • 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.8,787
  • 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.70,296
  • 1 கிராம் வெள்ளி - ரூ.108
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,08,000

இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. ரூ.10 உயர்ந்து, 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10-ம், 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43-ம் உயர்ந்துள்ளது.

அதே போல, வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூபாய் 108 எனவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.