ETV Bharat / entertainment

ஒரு மாததிற்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி’ - VIDAAMUYARCHI OTT RELEASE

Vidaamuyarchi OTT Release: அஜித்குமார் நடிப்பில் வெளியான ’விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விடாமுயற்சி’ போஸ்டர்
'விடாமுயற்சி’ போஸ்டர் (Lyca Productions)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 24, 2025, 4:23 PM IST

சென்னை: கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் வெளியான ’விடாமுயற்சி’ திரைப்படம் ஒரு மாதத்திற்குள் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் நிறைவடையாததால் பொங்கலுக்கு வெளியாகமால் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகியது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

முழுக்க முழுக்க அஜார்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பரவலாக பாரட்டப்பெற்றது. பரந்து விரிந்த நிலபரப்பின் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. தற்போது உலகம் முழுவதும் ’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.ன்

ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் இல்லை, வலுவான சண்டை காட்சிகள் இல்லை என கலவையான விமர்சனங்களையே ’விடாமுயற்சி’ பெற்றது. ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக புகழப்பட்டதே விடாமுயற்சிக்கு சோதனையாகவும் அமைந்தது. கடத்தப்பட்ட மனைவியை தேடி கண்டுபிடிக்கும் கணவனாக அஜித் யதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

வழக்கமாக அஜித் படங்களில் இருக்கும் ஹீரோயிசம் பெரிதாக இந்த படத்தில் இல்லை. மிகச்சாதரண மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் எப்படி கையாளுகிறார் என்பதை மிக இயல்பாக படமாக்கியிருந்தனர். ஏறக்குறைய 200 கோடி பட்ஜெட்டில் உருவான ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை 150 கோடி ரூபாய் அளவிற்கே வசூல் செய்துள்ளது. அஜித் ரசிகர்களிடையே இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: ’பேட்ட ராப்’ பாடலை ரசிகர்கள் முன் நிகழ்த்திய பிரபுதேவா... கடுப்பான வடிவேலு

தொடர்ந்து திரையரங்குகளில் விடாமுயற்சி ஓடி வரும் வேளையில் ஓடிடி வெளியீடு பற்றி அறிவிப்பு வந்துள்ளது. ’விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியாவதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகிறது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை ரிலீஸுற்கு முன்பே நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடித்துள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படம் அஜித்தின் மாஸ் காட்சிகள் நிரம்பிய படமாக ரசிகர்களை திருப்திபடுத்தும் என கூறி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.