டெல்லி :மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்து உள்ள பிரதமர் மோடி இன்று (ஜன. 21) தனுஷ்கோடு அடுத்த கோதண்டராமா சாம கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு வந்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அன்று ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர் மறுநாள் விமானம் மூலம் திருச்சி சென்றார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, புகழ்பெற்ற அரங்கநாத சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. கோயிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்த பிரதமர், தாயார் சந்நிதிக்கு எதிரே கம்பர் ராமாயணம் இயற்றிய மண்டபத்துக்கு வந்தார்.
அங்கு, கர்நாடக இசைக் கலைஞர்கள் முன்னிலையில் கம்ப ராமாயண சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாராயணம் நடைபெற்றது. இதனை மெய்மறந்து பிரதமர் மோடி கேட்டார். தொடர்ந்து, அங்கிருந்த புறப்பட்ட பிரதமர் மோடி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
முன்னதாக அங்குள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி புனித நீராடினார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (ஜன. 21) தனுஷ்கோடி செல்கிறார். அதன்படி காலை 9.30 மணிக்கு ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கூறப்படும் அரிச்சல் முனையை பார்வையிட்ட பிரதமர் மோடி அதன்பிறகு காலை 10.15 மணிக்கு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். நாளை (ஜன. 22) அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 11 நாட்கள் விரதம் இருந்து நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். அதன் ஒரு கட்டமாக பிரதமர் தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க :டெல்லி வரும் பிரான்ஸ் அதிபர்.. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பு!