ETV Bharat / technology

Google I/O 2025: கூகுளிடம் இருந்து என்னென்ன எதிர்பார்க்கலாம்! - GOOGLE IO 2025 DEVELOPER EVENT

கூகுள் I/O 2025 (இன்புட் / அவுட்புட்) டெவலப்பர் மாநாட்டில் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் உள்பட மெய்நிகர் ஹெட்செட் போன்ற பல தயாரிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ஐ/ஓ 2025 நிகழ்வு - கோப்புப் படம்
கூகுள் ஐ/ஓ 2025 நிகழ்வு - கோப்புப் படம் (Google)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 12, 2025, 3:34 PM IST

கூகுளின் பெரிய ஆண்டு நிகழ்வான ‘கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாடு 2025’ (Google I/O 2025 Event) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இந்த நிகழ்வை மே மாதம் 20-ஆம் தேதி நடத்துகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வு மே 21 அன்று நிறைவடையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிகழ்வில் எந்தெந்த தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும், நிறுவனத்தின் அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன என்பது தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்வை கூகுள் நேரலையில் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள மவுண்டன் வியூவின் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் இந்த சிறப்பு நிகழ்வை கூகுள் ஏற்பாடு செய்யவுள்ளது. அதன் விவரங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Google I/O 2025 நிகழ்வின் நேரம்:

மே 20 தொடங்கும் இந்த நிகழ்வின், தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நிறுவனத்தின் சாதனைகள், புதிய திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவார். இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாடு நேரலையில் பயனர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வு தொடர்பான இணைப்புகளை கூகுள் தங்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் செயற்கை நுண்ணறிவு (AI / ஏஐ) தொழில்நுட்பத்திற்கு நிறுவனம் முக்கியத்துவம் வழங்கலாம். மேலும், கூகுளின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஜெமினை-யில் வரவிருக்கும் புதிய அம்சங்கள், மேம்படுத்தல்கள், முன்னேற்றங்கள் ஆகியன குறித்த உரையாடல்களும் நிகழ்த்தப்படலாம்.

Google I/O 2025 எதிர்பார்ப்புகள்:

கூகுள் நிகழ்வில், புதிய இயங்குதளம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் குறித்த தகவல்களை நிறுவனம் பகிரலாம் அல்லது அதை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதனுடன் கூகுள் வியர் ஓஎஸ் 6 (Google Wear OS 6) அப்டேட்டும் வெளியிடப்படலாம்.

இதையும் படிங்க: சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸ்: AI-ன் மாயாஜால அம்சங்களுடன் அறிமுகம்; ரூ.10,000 வரை கேஷ்பேக்!

இது தவிர, கூகுள் அதன் கூகுள் மேப்ஸ், ஜெமினை ஏஐ செயலி, கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) உள்பட பல பயன்பாடுகளின் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும், கூகுள் XR ஹெட்செட்கள், கண்ணாடிகள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. எனவே, இது தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறலாம்.

மைக்ரோசாப்ட் நிகழ்வு:

கூகுள் தங்களின் ஐ/ஓ 2025 டெவலப்பர் நிகழ்வில் புதிய செயலிகள், மென்பொருள்களைக் குறித்த அறிவிப்புகளை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் வாரங்களில் தான் புதிய தகவல்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாப்ள இவரு; ஆனா சட்ட என்னது! DeepSeek-ஐ சந்தேகிக்கும் ChatGPT தலைமை?

இந்நிலையில், கூகுள் நிகழ்வு நடக்கும் மே 20, 21 ஆகிய தேதிகளுக்கு சற்று முன்பாக மைக்ரோசாப்ட் (Microsoft) தங்களின் நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது. மே 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வில், கோ-பைலட் பிளஸ் (Copilot Plus), விண்டோஸ் கணினி இயங்குதளம் (Operating System), மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் டேப்லெட் (Microsoft Surface Tablet) போன்ற தயாரிப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நிறுவனம் பயனர் பார்வைக்கு கொண்டு வரலாம் என வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.