நாசா, ஸ்பேஸ்-எக்ஸ் (NASA and SpaceX) இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் கூட்டு முயற்சிகளை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு பல சாதனைகளை படைத்துள்ளன. முன்பு, க்ரூ-10 மிஷன் மார்ச் மாதம் கடைசியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில தொழில்நுட்ப காரணங்களால், இந்த திட்டம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, மார்ச் 12ஆம் தேதி க்ரூ-10 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது. இந்தத் தேதி, பயணத்தின் தயார்நிலை மற்றும் நாசாவின் சான்றிதழ் செயல்முறை ஆகியவற்றைப் பொறுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம், க்ரூ-9 குழுவினர், க்ரூ-10 குழுவினருடன் சில நாட்கள் தங்கி, பணிகளைப் பரிமாறிக்கொண்ட பிறகு பூமிக்குத் திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படும் பழைய விண்கலம்
பொதுவாக, ஒவ்வொரு க்ரூ மிஷனுக்கும் ஒரு புதிய டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த முறை ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. க்ரூ-10 பயணத்திற்காக புதிதாக ஒரு டிராகன் விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்த விண்கலத்தின் சில தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால், முன்பு க்ரூ-3, க்ரூ-5 மற்றும் க்ரூ-7 மிஷன்களில் பயன்படுத்தப்பட்ட "எண்டூரன்ஸ்" டிராகன் விண்கலத்தையே இந்த முறை பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.
![பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் க்ரூ-10 விண்வெளி வீரர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23528460_nasa-crew-10-members.jpg)
இந்த விண்கலம் ஏற்கனவே மூன்று முறை விண்வெளிக்குச் சென்று வந்திருப்பதால், அதன் தற்போதைய நிலை, பாதுகாப்புத் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தீவிர சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விண்கலத்தின் அனைத்து பாகங்களும், குறிப்பாக அதன் இயந்திரம், எரிபொருள் டேங்க், கட்டுப்பாட்டு அமைப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் ராக்கெட்
இந்த சோதனைகள் முடிந்தவுடன், விண்கலம் மீண்டும் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். பின்னர், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 (SpaceX Falcon 9) ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு, விண்ணில் ஏவப்படும்.
இந்த மாற்றத்தின் வாயிலாக, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு புதிய விண்கலத்தின் உள்புற கட்டுமானப் பணிகளை முடிக்கவும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைக்கும். அதே நேரத்தில், க்ரூ-10 பயணத்தை விரைவாகவும், க்ரூ-9 குழுவின் பூமிக்குத் திரும்பும் பயணத்தை முன்கூட்டியே செயல்படுத்த திட்டத்தை வகுக்கவும் முடிந்துள்ளது. மேலும், இரண்டு குழுக்களும் தங்குவதற்கான கால அளவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
க்ரூ-10 பயணத்தில் இடம்பெறும் விண்வெளி வீரர்கள்
அதன்படி, க்ரூ-10 பயணத்தில் ஐந்து நாசா விண்வெளி வீரர்கள் இருப்பதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
![செல்ஃபி எடுத்துக்கொள்ளும் க்ரூ-10 விண்வெளி வீரர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23528460_nasa-crew-10-members-taking-selfie.jpg)
- ஆன் மெக்லைன் (கமாண்டர்),
- நிக்கோல் அயர்ஸ் (பைலட்),
- ஜாக்ஸா (ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி)
- விண்வெளி வீரர் தகுயா ஒனிஷி (மிஷன் ஸ்பெஷலிஸ்ட்)
- ரஷ்ய ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் (மிஷன் ஸ்பெஷலிஸ்ட்)
இதையும் படிங்க: SpaDex திட்டத்தில் சாதனை படைத்த இஸ்ரோ - உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்ததன் காரணம் என்ன? |
ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர் என தெரியவந்துள்ளது.
இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தனித்துவமான திறமைகள் உள்ளன. கமாண்டர் ஆன் மெக்லைன் ஒரு அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர். பைலட் நிக்கோல் அயர்ஸ் ஒரு திறமையான விமானி. ஒனிஷி ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் பிரதிநிதி. பெஸ்கோவ் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
க்ரூ-10 விண்வெளி நிலையத்தில் இறங்கியதும், க்ரூ-9 குழுவினர், புதிதாக வந்த குழுவினருக்கு அங்குள்ள அறிவியல், பராமரிப்புப் பணிகள் குறித்து அறிமுகப்படுத்துவார்கள்.
விண்வெளி பணிகள்
விண்வெளி நிலையத்தில் பலவிதமான அறிவியல் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும், விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு பணிகளும் மிகவும் முக்கியமானவை. இந்த பணிகளைப் குறித்து க்ரூ-9 குழுவினர், க்ரூ-10 குழுவினருக்கு விளக்குவார்கள்.
இது, பணிகளைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கு உதவும். இந்த பரிமாற்றம் முடிந்த பிறகு, நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் க்ரூ-9 இல் பூமிக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஃப்ளோரிடா கடற்கரைக்கு அருகில் அவர்கள் பத்திரமாக தரையிறங்க, வானிலை சாதகமாக இருக்க வேண்டும். வானிலை சாதகமாக இல்லாவிட்டால், தரையிறங்கும் தேதி மீண்டும் மாற்றப்படலாம்.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் நாசா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்படுகின்றன. மனித விண்வெளிப் பயணத்தில் எதிர்பாராத சவால்கள் ஏற்படுவது இயல்பு. இந்த சவால்களை எதிர்கொள்ளவும், திட்டங்களைச் சரியான நேரத்தில் நிறைவேற்றவும் நாசாவும் ஸ்பேஸ்-எக்ஸும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு, சவால் நிறைந்த எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான தூண்டுதலை உருவாக்கியுள்ளது.