தர்மபுரியில் தைப்பூச தேர் திருவிழா: பெண்கள் மட்டும் வடம் இழுத்து பக்தி பரவசம்! - THAIPUSAM CAR FESTIVAL
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/640-480-23528900-thumbnail-16x9-dpi.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 12, 2025, 5:57 PM IST
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர் திருவிழா, வரும் சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. 10 நாட்கள் தைப்பூச தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாபாரதம் நிலைபெயர்த்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
தேரில் சிவசுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த தேர் திருவிழாவில் அதிக பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டதால் தர்மபுரி மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.