வேலூர் மாவட்டத்தில் களைகட்டிய எருது விடும் திருவிழா... சீறிப்பாய்ந்த காளைகள்! - ERUDHU VIDUM VIZHA
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/640-480-23526391-thumbnail-16x9-vlr.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 12, 2025, 1:19 PM IST
வேலூர்: வடமாவட்டங்களில் எருது விடும் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு புகழ் பெற்றதாகும். இந்நிலையில் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தில் 64ஆம் ஆண்டு ஸ்ரீ காளியம்மன் திருவிழா முன்னிட்டு எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.
முன்னதாக இக்கிராமத்தில் எருதுவிடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதல் படி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே எருது விடும் விழாவில் அனுமதித்தனர்.
விழாவில் ஒரு எருது ஒரு சுற்று விடப்பட்ட நிலையில், அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசாக 70 ஆயிரமும், 2வது பரிசாக 60 ஆயிரமும். 3வது பரிசு 45 ஆயிரம் என மொத்தம் 47 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எருது விடும் திருவிழாவில் வேலூர், ஆம்பூர், காட்பாடி மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. மேலும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.