ETV Bharat / state

திரையுலக பிரபலமாக இருப்பதாலேயே அரசியலில் வெற்றி கிடைக்காது! நடிகர் விஜய் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து! - TVK LEADER VIJAY

திரையுலகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரே காரணத்தினால் அரசியலில் வெற்றி பெற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2025, 3:56 PM IST

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு அறிக்கை தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல், மதுரை மாநகர், புறநகர், தேனி, சிவகங்கை மற்றும் விருதுநகர் என ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற சிறப்புப் பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எழுப்பிய பல கேள்விகளுக்கு ஆளுநரும் ஒன்றிய அரசும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றிருக்கும் காட்சியை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து எந்தவிதமான காரணமும் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியிருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயணிப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு ஏன் ஆளுநர் ரவியை திரும்பப் பெற மறுக்கிறது? உடனடியாக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் 86,000 பேருக்கு பட்டா வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டியது - வரவேற்க வேண்டியது. நீண்ட நெடுங்காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் திரும்பி பார்க்காத இந்த சூழலில், தற்பொழுது உள்ள திமுக அரசு 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது என்பது நல்ல நடவடிக்கையாகும்.

பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கி தனது பெயருக்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முறைகேடாக பட்டா வாங்கியுள்ளார். இது தொடர்பாக எஸ்சி எஸ்டி ஆணையம் அந்தப் பட்டாவை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு முன்னாள் முதலமைச்சர் எப்படி வாங்கலாம்? இதில் என்ன நியாயம் உள்ளது? எப்படி அவருக்கு பட்டா மாற்றப்பட்டது? அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற போக்கு என்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் இதுவரை வாய் திறந்து பதிலே சொல்ல மாட்டேன் என்கின்றார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினம் தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் 244 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களே இவ்வளவு மோசமாக நடந்து கொண்டால் சமூகம் எங்கே இருக்கிறது? என்பதை கவலை அளிக்க கூடியதாக உள்ளது. பாலியல் தொடர்பான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் தடுப்பதற்கும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும். இது சமூகப் பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனை தடுப்பதற்கு கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் வீதி வீதியாக சென்று பாஜகவிற்கு வாக்குகள் சேகரித்துள்ளனர். அந்நிய நாட்டின் மீது படையெடுப்பது போல மோடி அரசாங்கம் படையெடுத்து தான் வெற்றி பெற்றுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கூட இரண்டு சதவீதம் மட்டுமே ஓட்டு வித்தியாசம் உள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் இணக்கமாக இருந்திருந்தால் இரண்டு சதவீதம் வாக்கு வித்தியாசத்தை சரி செய்து வெற்றி பெற்று பாஜகவை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை ஆட்சியை விட்டு அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என கூறியதோடு சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக நேற்று பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அண்ணாமலை தன்னை எதுவால் அடித்துக் கொள்வார்? தமிழ்நாட்டில் பாலியல் புகார்களில் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் பாஜக நிர்வாகிகள் தான்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்து நான்காம் ஆண்டில் அடித்து வைத்துள்ளார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை தாமதம் இன்றி நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடக்கூடிய ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் பக்கபலமாக இருப்போம்.

திருப்பரங்குன்றத்தில் பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தேவையில்லாத ஒரு பதற்றத்தை உருவாக்கி உள்ளனர் . அமைதியாக இருக்கின்ற திருப்பரங்குன்றத்தை கலவரப் பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. அதிமுகவை பொருத்தவரை ஓபிஎஸ் ஒரு பக்கம் இபிஎஸ் ஒரு பக்கமும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் பிரிந்துள்ளதால் இந்தியா கூட்டணி வெற்றி என்பது பிரகாசமாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

விஜய் தற்பொழுது தான் கட்சி ஆரம்பித்து உள்ளார். போகப் போகத்தான் அவரோடு செயல்பாடு எப்படி இருக்கும் என தெரிய வரும். பொதுவாக திரையுலகத்தில் பிரபலமாக இருக்கக் கூடிய ஒரே காரணத்தினால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று சொன்னால் அது நடக்காது . தமிழ்நாட்டு மக்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாதவர்கள் இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மக்கள் தமிழக மக்கள்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.