உலகளவில் இரத்த சோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 2019 -2021 காலகட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை நடத்திய தேசிய குடும்பநல ஆய்வில் (National Family Health Survey - NFHS) 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 53.4% பேர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இரத்த சோகை என்பது இரத்ததில் சிகப்பு இரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இரத்த சோகை நோய் ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. தரவுகள் படி, தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆண்களில் நான்கில் ஒரு பங்கு அதாவது 15.2 சதவீத ஆண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றன.
பெண்கள் நிலை?: பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு இரத்தம் வெளியேறுகிறது. இதனால், பெண்கள் இயல்பாகவே இரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
![தேசிய குடும்பநல ஆய்வு தரவுகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527421_q.jpg)
மற்ற மாநிலங்களில்?: நாடு முழுவதும் உள்ள 15 முதல் 49 வயதுடைய பெண்களிடம் இரத்தசோகை பாதிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அதிகப்பட்சம் மற்றும் குறைந்தபட்சம் இரத்தசோகை உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விவரம் பின்வருமாரு..
அதிகப்பட்டசமாக..,
- லடாக் யூனியன் பிரதேசம் - 92.8%
- மேற்கு வங்காளம் - 71.4 %
- திரிபுரா - 67.2%
- ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் - 65.9% பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
குறைந்தபட்சமாக..,
- லட்சத்தீவு - 25.8%
- நாகாலாந்து - 28.9%
- மணிப்பூர் - 29.4%
- மிசோரம் - 34.8 சதவிதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரத்த சோகையா? தினமும் இதை இரண்டு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்..ஆயுர்வேத வைத்தியம் உங்களுக்காக! - How to Increase Hemoglobin level |
பாதிப்புகள் என்ன? : உடலில் இரத்த சோகை இருந்தால், வலிமையின்மை, உடற்சோர்வு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும் என WHO கூறுகிறது. இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் இரத்தத்துக்குக் குறையும். இதுவே, உடல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
![கோப்புப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527421_1.jpg)
வைட்டமின் சி முக்கியத்துவம்: இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறைதான் இந்தியாவில் இரத்த சோகை உண்டாக காரணமாக இருக்கிறது. இரும்புச்சத்துக்காக நாம் உட்கொள்ளும் உணவுடன் எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி போன்ற உணவுகளை உட்கொண்டால், உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும். சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிப்பது போல வேறு சில உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
இரத்தசோகையை நீக்கும் உணவுகள்: பேரிச்சம் பழம், பால், இறைச்சி, கீரைகள், மீன், சுவரொட்டி, முருங்கைக்கீரை போன்ற உணவுகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உட்கொள்வதை உறுதி படுத்தவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.