மதுரை: மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதீனப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2012ஆம் ஆண்டு தன்னை (நித்யானந்தாவை) மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.
இது கடும் சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 அன்று காலமானார்.
இதனையடுத்து, முறைப்படி அவருக்குப் பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தற்போது எந்த வித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைவுக்குப் பிறகு, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது ஏற்புடையது அல்ல.