சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடைந்து, குளிர்காலம் தொடர்வதால் மாநிலத்தில் பரவலாக குளிர்ந்த வானிலையே நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 32.8° செல்சியஸ், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 19.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதேசமயம், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்) 5, ஊத்து (திருநெல்வேலி) அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 4, குன்னூர் PTO (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 3, குன்னூர் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கின்னக்கோரை (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), காக்காச்சி (திருநெல்வேலி), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), மாஞ்சோலை (திருநெல்வேலி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கெத்தை (நீலகிரி) தலா 2,
அடுத்த மூன்று தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-01-2025 மற்றும் 17-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (ஜன.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (ஜன.15): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
16-01-2025 முதல் 18-01-2025 வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.