மேஷம்: நீங்கள் தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் பங்களிப்பை பாராட்டுவீர்கள். சக பணியாளர்களிடம் உங்களது நிபுணத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தினால், ஆதாயம் பெறலாம்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகம் இருக்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது படைப்பாற்றல் காரணமாக, பணியிடத்தில் உறுதிப்பாட்டுடன் பணியாற்றுவீர்கள். உங்களது புகழ் காரணமாக, எதிர்பாராத வகையிலான பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்: தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, தீர்க்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாகத் தீர்க்கப்படும்.
கடகம்: காதல் துணையுடன், கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டுள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில், பரிசுகளை தருவார்கள்.
சிம்மம்: இன்று விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அதுகுறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ளவும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம், உங்கள் சுற்றியிருக்கும் மக்களை மகிழ்விப்பீர்கள். எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்.
துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. அதுகுறித்து நீங்கள் மன வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.
விருச்சிகம்: வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர். அதை அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில், சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.
தனுசு: வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான நாள்.
மகரம்: இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.
கும்பம்: இன்றைய தினத்தை, உங்களுக்காக செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும், நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்கு தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
மீனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்யலாம். உங்களது குழுவிற்கு, உங்கள் அனுபவத்தின் மூலம், செயல்திறனை நிரூபிக்க இயலும். அனைவரும் உங்களை போற்றுவார்கள். பெண்களுக்கு லாபம் கிடைத்து அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்.