ETV Bharat / opinion

உலகின் பிற பகுதிகளின் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து சீனாவை முழுமையாக எதிர்கொள்ள அமெரிக்கா திட்டம்! - CONFLICTS TO COUNTER CHINA

இஸ்ரேல்-காசா, ரஷ்யா-உக்ரைன் என உலகின் பிறபகுதிகளில் நடைபெற்றுவரும் சிக்கல்களை தீர்த்து வைத்த பின்னர் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை முழு பலத்துடன் எதிர்கொள்ள அமெரிக்கா திட்டமிடுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Image credits-AP)
author img

By Major General Harsha Kakar

Published : Feb 15, 2025, 11:29 PM IST

ஹைதராபாத்:இஸ்ரேல்-காசா, ரஷ்யா-உக்ரைன் என உலகின் பிறபகுதிகளில் நடைபெற்றுவரும் சிக்கல்களை தீர்த்து வைத்த பின்னர் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை முழு பலத்துடன் எதிர்கொள்ள அமெரிக்கா திட்டமிடுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குழுவானது பெரும்பாலும் சீனாவுக்கு எதிரான நபர்களையே கொண்டுள்ளது. குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, செனட்டர் ஆக இருந்த காலத்தில் இருந்தே சீனாவை விமர்சித்து வருபவராவார். சீனாவின் மனித உரிமை மீறல் ஆவணங்கள், பெல்ட் ரோடு முயற்சிகள் விளைவாக கடன்களில் விழுந்தது ஆகியவை குறித்து விமர்சித்து வருகிறார். பதிலுக்கு சீனா, அவருக்கு எதிராக இரண்டுமுறை தடை விதித்திருக்கிறது. இன்னும் கூட அவர் சீனாவுக்குள் நுழைவதற்கு தடை அமலில் உள்ளது. அமெரிக்காவின் செனட்டில் நடைபெற்ற விசாரணையில் அவரது சீனா குறித்த கண்ணோட்டங்களுக்கு தெளிவாக உள்ளன.

மார்க் ரூபியோவுக்கு தடை:அமெரிக்காவின் பெரிய அச்சுறுத்தலாக சீனா இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள ருபியோ, நாம் இந்த விஷயத்தில் பாதையை மாற்றாவிட்டால், நமது பாதுகாப்பு முதல் சுகாதாரம் வரை அனைத்து விதமான தினசரி அடிப்படையிலான விஷயங்களுக்கும் அதற்கு சீனா நம்மை அனுமதிக்குமா இல்லையா என்பதை சார்ந்து இருப்பதாக நாம் வாழப்போகும் உலகம் இருக்கக்கூடும். ருபியோ உடனான சந்திப்பு குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் கருத்து ஏதும் சொல்லவில்லை. தவிர அவருக்கு எதிரான தடை நீக்கப்படுமா என்றும் சொல்லவில்லை.

அமெரிக்கா-சீனா
அமெரிக்கா-சீனா (Image credits-AP)

அமெரிக்காவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வால்ட்ஸ் என்பவரும் சீனாவுக்கு எதிரானவராக உள்ளார். சீனா அமெரிக்காவின் பகை நாடு என்றும், இந்தியா உத்திப்பூர்வமான கூட்டாளி என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா-அமெரிக்கா காகஸ் என்ற கூட்டணைப்பில் முன்னாள் துணை தலைவராக இவர் இருந்துள்ளார். இந்தோ-பசிபிக் உத்தியில் சீனாவை தடுக்க தைவானுக்கு ஆயுதம் உள்ளிட்டவற்றை அமெரிக்க தொடர்ந்து விற்பனை செய்யும் என்று திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.

சீனாவுக்கு பதிலடிக்கு முன்னுரிமை: அமெரிக்க பாதுகாப்புத்துறை புதிய செயலாளர் பீட் ஹெக்செத், டிரம்ப் நிர்வாகத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுப்பது முதன்மையானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் செனட்டில் நடைபெற்ற விசாரணையில் இரண்டு முறை சீனாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "தரையிலும், வானிலும் நமது தாய்நாட்டை காப்பதற்கு மீண்டும் அடக்கு முறையை உருவாக்க வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வேண்டும் என்றே சண்டைக்கு வரும் கம்யூனிஸ்ட் நாடான சீனாவை தடுக்க கூட்டாண்மை நாடுகளுடன், தோழமை நாடுகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். அதே போல அதிபரின் முன்னுரிமையின்படி போர்களை முடிவுக்கு கொண்டு வர பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். முக்கிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மறுகட்டமைப்புடன் செயல்பட வேண்டும்,"என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கு ஆதரவு: இந்தியா உடனான உறவை மேலும் விரிவாக்குவது என்பது சீனாவுக்கு எதிரான பதிலடியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபரின் குழு உணர்ந்திருக்கிறது. இந்தியாவை, அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஜப்பான், இஸ்ரேல் மற்றும் நாட்டோ நாடுகளுக்கு இணையாக நடத்த வேண்டும் என்று கோரி மார்க் என்ற செனட்டர் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். எந்த ஒரு பாதுகாப்பு உதவியும் அளிக்காமல் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு (Image credits-PTI)

இதையும் படிங்க: டிரம்ப் 2.0: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளும், இந்தியாவுக்கான சாதக, பாதகங்களும்!

ராஜ்நாத் சிங் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பீட் ஹெக்செத், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தீங்கு விளைவிப்பதை தடுக்க ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தினார். சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவற்றின் ஆய்வு நிபுணராக மைக் வால்ட்ஸ் திகழ்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரானவர்: டிரம்பின் புதிய குழுவில் பால் கபூர் என்பவர் புதிதாக இணைந்திருக்கிறார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ளார். டொனால்டு லூ என்பவருக்கு மாறாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது பதவி நீக்கத்தை திட்டமிட்டதாகவும், வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னணியில் இருந்ததாகவும் இம்ரான் கான் இவர் மீது குற்றம் சாட்டினார். இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அணு சக்தி விஷயங்கள் ஆகியவற்றில் இவர் நிபுணர் ஆவார். பாகிஸ்தானுக்கு முற்றிலும் எதிரானவர். அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனில் தொடர்ந்து இவர் எழுதி வருகிறார். மேலும் அமெரிக்கா-இந்தியா டிராக் 1.5 டயலாக் என்ற அமைப்பின் பகுதியாகவும் செயல்படுகிறார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் இருந்து விடுவபட வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பாக உணரத் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலும் இது போருக்கு வழி வகுக்கக்கூடிய உண்மையைக் கொண்டதாக இருக்கலாம் என்று அமெரிக்கா உணர்ந்திருக்கிறது. ஆகையால், உக்ரைன், காசா ஆகிய பிரச்னைகளில் சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வருவதில் டிரம்ப் அவசரம் காட்டுகிறார். மேலும் இதர பிராந்தியங்களில் பெரும் அளவில் அமெரிக்கா ஈடுபாடு காட்டுவதில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் விரும்புகிறார். அண்மைய காலங்களில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?:உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதினுடன் நீண்டநேரம், மிகவும் அர்த்தமுள்ள வகையில் போன் மூலம் உரையாடியதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த அபத்தமான போரை நிறுத்த வேண்டிய நேரம் இது, அங்கு மிகப்பெரிய மற்றும் முற்றிலும் தேவையற்ற, மரணமும் அழிவும் நடந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் மக்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக!’ என்று கூறியுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சவுதி அரேபியாவில் விரைவில் சந்திக்க உள்ளதாக கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் (Image credits-AP)

இது தவிர டிரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக ஜெலன்கியுடன் பேச உள்ளார். தங்களை தவிர்த்து விட்டு புதினிடம் மட்டும் டிரம்ப் பேசுவாரோ என்று உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் அச்சம் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தலைமையிலான உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழுவிடம் பேசிய பீட் ஹெக்செத், உக்ரைனின் எதிர்காலம் என்று அமெரிக்கா உணர்ந்ததில் வெளிப்படையாக இருந்தது என்றார். உக்ரைன் எல்லைகளைப் பொறுத்தவரை 2014க்கு முந்தைய நிலைக்கு திரும்புதல் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். உக்ரைன் அமைதியை விரும்பும்பட்சத்தில், போரில் கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யாவிடம் இழந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா தலையிடாது: உக்ரைன் நோட்டோ நாடுகளுக்குள் அனுமதி இல்லை. இது ரஷ்யாவின் உணர்வுகளை தூண்டக்கூடிய விஷயமாக இருக்கும். மேலும், உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களை கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதனை ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத படைகள் கொடுக்க வேண்டும். அமெரி்க்கா இதில் தலையிடாது. ஐநாவின் பங்கு குறித்து கூறிய அவர், ஐநா அமைதிப்படையினர் உக்ரைனில் நிறுத்தப்பட்டால், அவர்கள் ஐரோப்பிய படைகளை ஈடுபடுத்தக் கூடும். ஆனால் அதுவே நேட்டோ அல்லாத பணியாக இருக்கும். பிரிவு 5 இல்லாமல், ரஷ்யா உடன் சிக்கல் எழுந்தால் அமெரிக்கா அதில் ஈடுபடாது என்று மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். இறுதியாக, நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பினர்கள் ஐரோப்பிய பாதுகாப்பை கையாள வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இது தவிர புதிய நிர்வாகத்தின் முன்னுரிமைகள் குறித்தும் பீட் ஹெக்செத் விளக்கினார். அமெரிக்காவின் முன்னுரிமைகளின் மாற்றம் குறித்தும் மறைமுகமாகத் தெரிவித்தார். ‘இந்தோ-பசிபிக் பகுதியில் நமது தாய்நாட்டையும் முக்கிய தேசிய நலன்களையும் அச்சுறுத்தும் திறன் மற்றும் நோக்கம் கொண்டதாக கம்யூனிஸ்ட் சீனாவை ஒரு சக போட்டியாளராக நாங்கள் எதிர்கொள்கிறோம். பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் போர் என்பதை தடுப்பதற்கே அமெரிக்கா முன்னுரிமை கொடுக்கிறது. பற்றாக்குறையின் யதார்த்தத்தை அங்கீகரித்து தடுப்பு நடவடிக்கை தோல்வியடையாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் 5 சதவிகித பாதுகாப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதே போன்ற அணுகுமுறையை காசா விவகாரத்திலும் அமெரிக்கா மேற்கொண்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தமது விதிமுறைகளை அரேபிய நாடுகளிடம் டிரம்ப் அழுத்தமாக கூறினார். மேலும் வலுவான ராணுவ நடவடிக்கை எச்சரிக்கையையும் அவர் கொடுக்க தவறவில்லை. எனினும், இது மெதுவான செயல்பாடாக இருக்கும். தவிர இரண்டாம் பட்சமாக அமெரிக்காவின் தலையீடு என்பது வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். அமெரிக்கா காசாவை அதன் குடியிருப்பாளர்கள் இல்லாமல் நடுநிலையாகக் கைப்பற்றுவதன் மூலம், எதிர்காலத்தில் மோதல்களுக்கு எந்த காரணமும் இருக்காது என்று டிரம்ப் கருதுகிறார்.

இந்தோ-பசுபிக்குக்கு முன்னுரிமை: டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் சொல்லும் செய்தி, அவர்களின் முன்னுரிமை என்பது இந்தோ-பசுபிக் பிராந்தியம், சீனாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகியவையாக இருக்கிறது. சீனாவை கட்டுக்குள் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு இராணுவ சக்தியை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தெற்கு ஆசியாவில் ஒரு துறையில் கூட சீனா வெற்றி பெற்றுவிட்டால், அமெரிக்காவின் சர்வதேச நிலையை சேதப்படுத்துவதாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் தாம் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவதில்லை என்பதை சீனா வெளிப்படுத்துகிறது. டிரம்ப்பின் அதிரடி கட்டண விதிப்புகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு பொருளாதார சிக்கலுக்கு அது தயாராகவே இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன் வரை மறுக்கும் நிலையில், அமெரிக்காவே முதல் அடி எடுத்து வைக்கட்டும் என்று சீனா கருதுகிறது. ஆனால், அதனை டிரம்ப் புறகணித்து விட்டார்.

அமெரிக்கா தனது தைவான் கொள்கையில் இதுவரையிலும் தெளிவற்றதாகவே உள்ளது.இந்த தெளிவின்மையை சீனா தனது நிலையை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நம்பிக்கைக்கு பதிலடி கொடுக்க, உலகின் பிற பகுதிகளில் தனது ஈடுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தை அமெரிக்கா வெளிப்படுத்துகிறது. சீன சவாலை எதிர்கொள்ள இந்தோ-பசிபிக் பகுதியில் அதன் இருப்பை மேம்படுத்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.