மயிலாடுதுறை: தமிழில் முக்கியமான நடிகராக வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த திங்கள்கிழமை (பிப்.17) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ’பராசக்தி’ படக்குழுவிலிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
அதே போல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ’மதராஸி’ என பெயரிப்பட்ட அந்த படத்தின் டைட்டில் டீசரும் அன்று வெளியிடப்பட்டது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர்.
திரைப்பட அறிவிப்புகள் மட்டுமல்லாமல் கமல்ஹாசன், சீமான் என அரசியல் ஆளுமைகளும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளினை முன்னிட்டு ரசிகர்கள் அவரது உருவத்தை தரங்கம்பாடி கடற்கரை மணலில் தத்ரூபமாக வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டதை ட்ரோன் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். கடற்கரையில் அருகே மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மணல் ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது. ட்ரோன் காட்சிகள் மூலம் அந்த மணல் ஓவியத்தை பார்க்கும்போது மேலும் வியக்க வைப்பதாக இருக்கிறது. இத்தகைய வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை (பிப் 17) நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி கடற்கரையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மணல் ஓவியம் வரையப்பட்டது.
அகில இந்திய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற இயக்கத்தினர் தரங்கம்பாடி கடற்கரையில் மணல் ஓவியத்தில் சிவகார்த்திகேயனின் படத்தை வரைந்து அசத்தினர். மணல் சிற்ப ஓவியரும், நற்பணி மன்ற நிர்வாகியுமான துர்கா கடற்கரையின் ஓரம் சிவகார்த்திகேயனின் உருவத்தினை மணலால் தத்ரூபமாக வரைந்தார்.
இதையும் படிங்கள்: சிம்பு குரலில் ஆட்டம் போடும் ஹரீஷ் கல்யாண்... ’டீசல்’ படத்தின் ’தில்லுபரு ஆஜா’ பாடல் வெளியீடு!
மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்ட இந்த மணல் ஓவியத்தை சுற்றியும் சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் கொடிகள் மூலம் ஃப்ரேம் போல உருவாக்கியிருந்தனர். ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மணல் ஓவிய உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரிய அளவிலான இந்த மணல் ஓவியத்தை ட்ரோன் மூலம் காட்சிப்படுத்தி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் தரங்கம்பாடி சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.