சென்னை: துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஜித்குமாரின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித்குமார்.
இதையடுத்து நடிகர் அஜித்குமார் வெளியிட்ட நன்றி அறிக்கையில், ”துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
Thank u note from AK pic.twitter.com/8hFC8okz78
— Suresh Chandra (@SureshChandraa) January 14, 2025
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் நன்றி”, என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கார் பந்தயம் முடிந்தபின் நடிகர் அஜித்குமார் துபாயிலுள்ள `Gulf News' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மனநல ஆரோக்கியம் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மனநலம் பலருக்கும் மோசமாகி வருகிறது. சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மனநலம் மிகவும் ஆர்ரோக்கியமாக இருக்க வேண்டும். பலரும் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன்.
உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களே, படத்தை பாருங்கள். அஜித் வாழ்க, விஜய் வாழ்க எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்." எனப் பேசியிருந்தார்.
" my request to fans, watch films, but "#Ajith Vaazhka" or "#Vijay Vaazhka" won't help you out. When are you going to live your life? I will be very happy if my fans are successful in life♥️♥️. Please be kind to my co-stars👏"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 13, 2025
- #Ajithkumar pic.twitter.com/LrRfOCUSos
மேலும், “பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும். `முன் சந்திக்காத மனிதர்களையும் மதங்கள் வெறுக்கச் செய்யும்' என்ற பிரபலமான கூற்று ஒன்று இருக்கிறது. இது உண்மையானதும்கூட. இது கிணத்துக்குள் இருக்கும் தவளையைப் போன்றது.
இதையும் படிங்க: 28 ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடப்படும் ’இருவர்’.. இரு சாமனியர்கள் அரசியல் கதை
பயணம் செய்யும்போது நீங்கள் எவ்வளவு சிறியவர்கள், இந்த உலகம் எவ்வளவு சிறியது என்பது உங்களுக்குப் புலப்படும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்” என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.