ETV Bharat / state

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க மனு! - MADURAI METRO RAIL

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவிற்கு, மனுதாரர் கோரிக்கையும் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ரயில் திட்டம் - கோப்புப் படம்
மதுரை ரயில் திட்டம் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 2:13 PM IST

மதுரை: மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு, அரசின் கொள்கை ரீதியான முடிவு இருப்பினும், வருங்காலங்களில் இந்த திட்டத்தை நீட்டிக்கும் போது மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 27 நிலையங்களுடன் திட்டம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்ட திட்டத்தில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில், இரண்டு கூடுதல் பாதைகள் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி நடத்தும் ஹைப்பர்லூப் போட்டி; ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை!

ஆனால் ஒத்தக்கடை முதல் மேலூர் வரையிலான பகுதியை பரிசீலிக்க மெட்ரோ நிர்வாக அலுவலர்கள் தவறிவிட்டனர். மேலூர் பகுதியில் 50,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் சூழலில், ஏராளமான விவசாய உற்பத்தியை கொண்ட பகுதியாக மேலூர் உள்ளது. பலருக்கும் போக்குவரத்து தேவை அவசியமாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. ஆகவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்," எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியக்கிளாட் அமர்வு, "இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. இருப்பினும் வருங்காலங்களில் திட்டத்தை நீட்டிக்கும் போது இந்த மனுவை பரிசீலிக்க வேண்டும்," என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.