ETV Bharat / state

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை....கடன் தொல்லையால் சேலத்தில் நடந்த சோகம்! - FAMILY COMMIT SUICIDE

கடன் தொல்லை காரணமாக சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 2:50 PM IST

Updated : Jan 28, 2025, 4:51 PM IST

சேலம்: கடன் தொல்லை காரணமாக சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிபாளையம் முத்தையாலூ தெருவில் வெள்ளிப்பட்டறை நடத்தி வந்தவர் பால்ராஜ்(45). இவர், தனது மனைவி ரேகா(35) மற்றும் 11ம் வகுப்பு படித்து வந்த மகள் ஜனனி(15) ஆகியோருடன் வசித்து வந்தார். இன்று காலை அவர்கள் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தவர்கள், உறவினர்கள் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். காலிங் பெல்லையும் அடித்து பார்த்தனர். ஆனால், உட்பக்கம் கதவு பூட்டியிருந்த நிலையில், யாரும் கதவை திறக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் முதல் தளத்தில் உள்ள பால்ராஜின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: "எதிர்க்கட்சியினரின் சிந்தனையில் குறைபாடு இருப்பதால் அரசை குறை சொல்கின்றனர்"-விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பால்ராஜ் சொந்தமாக வீடு கட்டவும், தொழில் செய்யவும் பலரிடம் கடன் வாங்கியதாக தெரியவந்தது. கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக கடனை திருப்பி தரும்படி வீட்டுக்கும், தொழில் நடத்தும் இடத்துக்கும் சென்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் பால்ராஜூம் அவரது குடும்பத்தினரும் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாக போலீசார் கூறினர். பால்ராஜ்க்கு கடன் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து அவர்களில் யாரெல்லாம் பால்ராஜ் குடும்பத்தினர் மிரட்டினர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

Last Updated : Jan 28, 2025, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.