கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் அடுத்த ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் - விமலா தம்பதி. இவர்களது மகள் தியா காயத்ரி (25). ஐடி ஊழியரான இவருக்கும், கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான தீட்சித் என்பவருக்கும், கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
ஆனால், திருமணமான ஒரு மாதத்திலேயே, கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மூவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கணேசன், விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்யும் முன்பு, கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்புகொண்டு, மகளின் நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர் தொடர்புகொள்ளவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த கணேசனின் தம்பி, அண்ணனின் செல்போனுக்கு பல முறை அழைத்தும் அவர் எடுக்காததால், நேற்று (பிப்.23) இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.