தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சுற்றுலா தளத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரிசல் ஓட்டிகள், பரிசல் ஒப்பந்தம் நாட்களை நீட்டிக்க வேண்டும் என வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின் பரிசல் ஓட்டிகளிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று வேலை நிறுத்தத்தை கைவிட்டு பரிசல் இயக்க தொடங்கினர்.
மீண்டும் துவங்கப்பட்ட ஒகேனக்கல் பரிசல் சவாரி- மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..! - Hogenakkal Parisal ride resumes - HOGENAKKAL PARISAL RIDE RESUMES
Hogenakkal opened: இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் இன்று தொடங்கப்பட்டது, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த்தால் களைகட்டிய ஒகேனக்கல் சுற்றுலா தலங்கள்.
Published : Jun 16, 2024, 3:13 PM IST
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் காலையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கலில் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று மாலை வரை 700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 200 கன அடி அளவு குறைந்து, 500 கன அடியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் குளித்தும் பரிசல் பயணம் மேற்கொண்டும் தொங்கு பாலம், சினி அருவி உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: தொடர் மிரட்டல்களால் நடைமுறை பணிகள் பாதிப்பு