கொல்கத்தா : இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஆரம்பம் முதலே மிக மோசமாக விளையாடி வருகிற்து பெங்களூரு அணி.
இதுவரை 7 ஆட்டங்கள் விளையாடி உள்ள பெங்களூரு அணி அதில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று மீதமுள்ள ஆட்டங்களில் படுதோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், நடப்பு சீசனில் பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கை வைக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
அதேபோல் பெங்களூரு அணியில் வீரர்களும் பெரிய அளவில் சோபிக்க தவறி வருகின்றனர். கேப்டன் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய அளவில் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் சீசனைல் 6 ஆட்டங்களில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார்.
அண்மையில் சொந்த மண்ணில் ஐதராபாத் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு படுதோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 287 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன் குவித்த அணி என்ற தனது சாதனையையே முறியடித்து மீண்டும் புது சாதனை படைத்தது.
இந்நிலையில், பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இருந்து நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகுவதாக அறிவித்து உள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் கூடுதலாக சிறிது காலம் ஓய்வெடுத்து நல்ல பயிற்சி மேற்கொள்ளவும் திட்டமிட்டு உள்ளதாக கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக நடப்பு சீசனில் அவுட் ஆப் பார்மில் உள்ள தனக்கு பதிலாக நல்ல வீரரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அணி நிர்வாகத்திடம் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை யாருக்கு வெற்றி கிட்டப் போகிறது என்பதை ரசிகர்கள் பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க :கூகுள் ஊழியர்கள் 28 பேர் அதிரடி பணி நீக்கம்! இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை கண்டித்ததால் நடவடிக்கை! - Google Layoff