ETV Bharat / sports

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா! உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிக்கான வாய்ப்பை இழந்த இந்தியா! - AUS VS IND 5TH TEST

10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி இழந்துள்ளது.

Ind Vs Aus
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் ஆஸி. வீரர்கள் (AP)
author img

By PTI

Published : Jan 5, 2025, 9:33 AM IST

சிட்னி: சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 162 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் எட்டியது. டிராவிஸ் ஹட் 34 ரன்களுடனும் , பி வெப்ஸ்டர் 39 ரன்களுடனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 - 3 என்ற வித்தியாசத்தில் இழந்துள்ளது. இந்த மொத்த தொடரிலும பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 3 வது நாளான இன்று 6 விக்கெட்டுகளுக்கு 141 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 4 விக்கெட்டுகளை 16 ரன்களுக்குள் கோட்டை விட்ட இந்திய அணி 2 வது இன்னிங்சில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களா பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலந்து ஆகியோர் போட்டி போட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்காட் போலந்து ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 4 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள நிலையில், தற்போது தொடரை இழந்தது.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா இந்தியா
முதல் இன்னிங்ஸ் 181 185
இரண்டாவது இன்னிங்ஸ்157 (39.5 ஓவர்களில் ஆல் அவுட்)162/4 (27 ஓவர்)

சிறந்த ரன் குவிப்பு

ரிஷப் பண்ட் (இந்தியா) - 61 ரன்

உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா) - 41 ரன்

டிராவிஸ் ஹட் (ஆஸ்திரேலியா) - 41 ரன் நாட் அவுட்

பீ வெப்ஸ்டர் (ஆஸ்திரேலியா) - 39 ரன் நாட் அவுட்

சிறந்த பந்து வீச்சு

ஸ்காட் போலாந்து (ஆஸ்திரேலியா) : 6/45

பிரசித் கிருஷ்ணா (இந்தியா) : 3/65

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.