ஓட்டாவா: தமது பதவியை ராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது பதவியை ராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ஆளும் லிபரல் கட்சிக்கு புதிய தலைமையை தேர்ந்தெடுத்ததும் தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விரைவில் வெளியேறிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதென முடிவெடுத்துள்ளேன்" என்று செய்தியாளர்களிடம் அவர் இன்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி வகித்துவரும் ட்ரூடோ, அரசியல் நெருக்கடி, உட்கட்சி பூசல் போன்ற காரணங்களால் ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.